'கட்டிங்' போட்டு வண்டி ஓட்டினால் லைசென்ஸ் 'கட்'

Subscribe to Oneindia Tamil


சேலம்: குடிபோதையில் வாகனத்தை ஓட்டி பிடிபட்டால், ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். வாழ்நாளில் மறுபடியும் அவர்களுக்கு உரிமமே வழங்கப்பட மாட்டாது என போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

தமிழ்நாட்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் சாலை விபத்துக்களில் வருடத்திற்கு 10 ஆயிரம் பேர் வரை உயிரிழக்கின்றனர். நாமக்கல், கிருஷ்ணகிரி, சேலம் சரகத்தில் மட்டும் 1000 பேர் வரை உயிரிழப்பதாக புள்ளி விவரம் ஒன்று கூறுகிறது.

குடிகாரர்களால்தான் பெரும்பாலான விபத்துக்கள் நடக்கின்றன. எனவே குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதை தடுக்கவும், விபத்துக்களை குறைக்கவும், குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படியும் போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

தற்போது குடிபோதையில் வண்டி ஓட்டி வருபவர்களைப் பிடித்தால் அவர்களுக்கு ரூ. 2500 வரை அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் மீண்டும் மீண்டும் தவறு செய்தால் அவர்கள் மீது நடவடிக்ைக எடுக்க வழியில்லாமல் உள்ளது.

இந்த நிலையில், மறுபடியும் மறுபடியும் குடித்து விட்டு வண்டி ஓட்டினால் அவர்களின் லைசென்ஸை ரத்து செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதுகுறித்து சேலம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் கூறுகையில், போதையில் வாகனம் ஓட்டுபவர்களை கைது செய்து சிறையில் அடைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், அவர்களின் உரிமத்தை ரத்து செய்ய வட்டார போக்குவரத்து அதிகாரி மற்றும் அந்த மாவட்ட கலெக்டருக்கு அறிக்கை அளிக்கப்படும். முதல்கட்டமாக 35 பேரின் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது என்றார்.

இதைப்பற்றி வட்டார போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், குடிபோதையில் வாகனம் ஓட்டிய குற்றம் முதல் முறையாக இருந்தால் அவர்களுக்கு மெமோ கொடுத்து 3 மாதத்திற்கு ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படும்.

மீண்டும் அதே குற்றத்தை செய்தால் அதுகுறித்து 15 நாட்களுக்குள் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அளிக்கப்படும். நோட்டீஸ் குறித்து விளக்கம் அளித்த மறுநாளே ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும்.

ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அவர்களின் புகைப்படம், பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்களை ஆன்லைனில் வெளியிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது. இதன்மூலம் ஓட்டுனர் உரிமம் ரத்து செய்யப்பட்ட ஒருவர், இந்தியாவின் வேறு எந்த வட்டார போக்குவரத்து அலுவலகத்திலும் புதியதாக உரிமம் பெற முடியாது என்று தெரிவித்தார்.

சபாஷ், சரியான அடி!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+