பாலக்காட்டுக்காக பொள்ளாச்சியைbr/பலிகடா ஆக்குவதா? - ஜெ. கண்டனம்
சென்னை:
சேலம் கோட்டத்திற்கு கோவை, திருப்பூர் உள்ளிட்ட பகுதிகளைக் கொடுத்ததற்குப் பதிலாக பொள்ளாச்சி, கிணத்துக்கடவு ஆகிய ஊர்களை மதுரை கோட்டத்திலிருந்து பிரித்து பாலக்காடு கோட்டத்துடன் சேர்ப்பதைக் கண்டித்து பொள்ளாச்சியில் அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சேலம் ரயில்வே கோட்டம் அமைப்பது தொடர்பாக தமிழகத்தில் உள்ள ஒரு பகுதி மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டுக் கண்டு மிகுந்த அதிர்ச்சியும், மன வேதனையும் அடைகிறேன்.
பொள்ளாச்சி, கிண்த்துக்கிடவு பகுதிகள் பாலக்காடு கோட்டத்தில் இணைக்கப்பட்டு இருப்பதன் மூலம் அப்பகுதி மக்கள் பலிகடா ஆக்கப்பட்டு இருப்பது அனுமதிக்க முடியாத ஒன்றாகும்.
பொள்ளாச்சி முதல் பாலக்காடு வரையுள்ள 58 கிலோமீட்டர் மற்றும் பொள்ளாச்சி முதல் கிணத்துக்கிடவு வரையுள்ள 21 கிலோமீட்டர், ஆக மொத்தம் 79 கிலோமீட்டர் வரையுள்ள எல்லைப் பரப்பு இனிமேல் பாலக்காடு ரயில்வே கோட்டத்துடன் இணைந்து செயல்படும் என்று அறிவித்திருப்பது மிகவும் துரதிருஷ்டவசமானதாகும்.
கடந்த 12 வருட காலமாக அகல ரயில் பாதைக்காக போராடி வரும் பொள்ளாச்சி, கிணத்துக்கிடவு பகுதி மக்களின் கோரிக்கையை நிறைவேற்றாமல், அதற்கு நிகராக அப்பகுதியை பாலக்காடு கோட்டத்தில் இணைத்திருப்பதன் மூலம் மத்திய அரசு ஒரு தலைபட்சமான நடவடிக்கையில் இறங்கியிருக்கிறது என்பது தெரியவருகிறது. மத்திய அரசின் இந்த செயல் கடும் கண்டனத்திற்குரியதாகும்.
எனவே பொள்ளாச்சி மற்றும் கிணத்துக்கிடவு பகுதிகளை மீண்டும் மதுரை கோட்டத்துடனோ அல்லது சேலம் ரயில்வே கோட்டத்துடனோ இணைக்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்து, கேரள அரசுக்கு சாதகமாக செயல்பட்ட திமுக அரசைக் கண்டித்தும் வரும் செப்டம்பர் 18ம் தேதி காலை 10 மணியளவில் அதிமுகவின் தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன் தலைமையில் பொள்ளாச்சி வட்டாட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறியுள்ளார்.
-
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications