லாரியில் 'ரூம்' போட்டு எரி சாராயம் கடத்தல்!
மார்த்தாண்டம்:
கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே லாரியில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் சிக்கியது.
குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி அருகே போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த ஒரு லாரி நின்றது. அந்த லாரியில் சரக்கு எதுவும் இல்லை. லாரியை நிறுத்தி விட்டு டிரைவர் தப்பி ஓடினார்.
இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் லாரியை சோதனை செய்ததில் லாரியின் அடிப்பகுதியில் ரகசிய அறை அமைத்து கடத்தப்பட்ட ரூ.4 லட்சம் மதிப்புள்ள எரிசாராயம் பிடிப்பட்டது.
படு நேர்த்தியாக அமைக்கப்பட்டிருந்த அந்த அறையில் எரிசாராய கேன்கள் அழகாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இதேபோல, குழித்துறை படந்தாலுமூடு தேசிய நெடுஞ்சாலையில் உள்ள செக்போஸ்ட்டில் நேற்று நள்ளிரவு 12 மணியளவில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது கேரளா நோக்கி புத்தம் புதிய லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் லாரியை நிறுத்துமாறு சைகை செய்தனர். இதையடுத்து லாரி நிறுத்தப்பட்டதும், அதில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அதில் சரக்கு எதுவும் இல்லாமல் இருந்தது.
போலீசாரின் கவனம் லாரியில் இருந்தபோது அந்த தருணத்தை பயன்படுத்தி டிரைவரும், கிளீனரும் தப்பி ஓடிவிட்டனர். இதனால் சந்தேகமடைந்த போலீசார் லாரியை முழுமையாக சோதனைக்கு உட்படுத்தினர். அப்போது ஆரல்வாய்மொழியில் சிக்கிய லாரியை போன்றே இதிலும் ரகசிய அறைகள் அமைக்கப்பட்டிருந்தன.
மறைத்து வைக்கப்பட்டிருந்த 35 லிட்டர் கொள்ளளவு கொண்ட 82 கேன்களில் இருந்த 2270 லிட்டர் எரிசாராயத்தை கைப்பற்றினர். இதன் மதிப்பு ரூ.10 லட்சம் ஆகும்.
-
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன -
“திருச்சுழியில் போட்டியிட விருப்பமனுவே தராத என்னை அனுப்பிட்டாங்க” அதிமுக வேட்பாளர் ராஜவர்மன் குமுறல் -
Heavy Rain: கனமழை பிச்சு உதறும்.. கோவை, நீலகிரி, தேனியில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கும்.. வானிலை எச்சரிக்கை












Click it and Unblock the Notifications