போலி முத்திரைத்தாள் வழக்கு: குற்றவாளி நவாஸுக்கு 5 ஆண்டு சிறை!
சென்னை:
பல கோடி போலி முத்திரைத் தாள் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட சர்பிராஸ் நவாஸ் என்பவருக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சென்னை சிறப்பு சிபிஐ நீதிமன்றம் உத்தரவிட்டது.
போலி முத்திரைத் தாள் வழக்கில் அப்துல் கரீம் டெல்ஜி முக்கியக் குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தமிழகத்தில் சஸ்பெண்ட் செய்யப்பட்ட டிஐஜி முகம்மது அலி, நிஜாமுதீன், முன்னாள் உதவி ஆணையர் சங்கர், எல்.ஐ.சி. ஏஜென்ட் ராமசாமி சாது, நிஜாமுதீனின் மனைவி நஸ்னீன், பீட்டர் கென்னடி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.
இவர்கள் மீது சென்னை சிறப்பு சிபிஐ நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் இந்த வழக்கில் டெல்ஜி, சர்பிராஸ் நவாஸ், ஜேக்கப் சாக்கோ, அப்துல் வாஹித், பாலாஜி ஆகியோர் சேர்க்கப்பட்டனர்.
இந்த வழக்கில் பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சர்பிராஸ் நவாஸ் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதாக கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி அறிவிக்கப்பட்டது. இறுப்பினும் தண்டனை அறிவிக்கப்படாமல் இருந்தது.
இன்று நீதிபதி வேலு தண்டனையை அறிவித்தார். பெங்களூர் சிறையில் உள்ள நவாஸிடம் இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரணை நடந்தது. அதன் பின்னர் அவருக்கு 5 ஆண்டு தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதி வேலு அறிவித்தார்.
இதேபோல வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள டெல்ஜி, ஜேக்கப் சாக்கோ, அப்துல் வாஹித் (அனைவரும் புனே சிறையில் உள்ளனர்), பாலாஜி (பெங்களூர் சிறை) ஆகியோரையும் வீடியோ கான்பரன்சிங் மூலம் விசாரித்த நீதிபதி வழக்கு விசாரணையை அக்டோபர் 22ம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications