சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மறுப்பு: அரசு மருத்துவமனையில் பெண் தர்ணா
திருநெல்வேலி:
நெல்லை, பாளையங்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டர் சிகிக்சை அளிக்காததை கண்டித்து பெண் ஒருவர் குடும்பத்துடன் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
செங்கோட்டை பிரானுர் பார்டரைச் சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி மாரியம்மாள். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். மாரியம்மாளுக்கு கர்ப்பபை புற்றுநோய் இருந்தது. இதற்காக அவர் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் அங்கிருந்த டாக்டர்கள் அவரை பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் மாலை சிகிச்சைக்கா பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு மாரியம்மாள் சென்றார்.
அப்போது டாக்டர்கள் யாரும் சிகிச்சை அளிக்க முன்வரவில்லை. இதனால் அவர் இரவு முழுவதும் மகப்பெறு வார்டு பகுதியிலேயே உட்கார்ந்து இருந்தார்.
பின்னர் நேற்று காலை அவர் கேன்சர் பிரிவு பகுதிக்கு சென்றபோது அங்குள்ள டாக்டர் ஒருவர் சிகிச்சை அளிக்க முடியாது என்று கூறிவிட்டார். இதனால் மனமுடைந்த மாரியம்மாள் தனது கணவர் மற்றும் உறவினர்களுடன் சேர்ந்து கேன்சர் பிரிவு வார்டு முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
இதுகுறித்து மாரியம்மாள் கணவர் முருகன் கூறும்போது எனது மனைவியின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அதற்கு இங்குள்ள டாக்டர்கள்தான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்றார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications