சாலை விபத்தில் கான்ட்ராக்டர், டிரைவர் பலி
கோவில்பட்டி:
தூத்துக்குடி மாவட்டம் எட்டையபுரம் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் கட்டிட கான்ட்ராக்டர் மற்றும் அவரது கார் டிரைவர் பலியாகினர்.
தூத்துக்குடி ஸ்டேட் வங்கி காலனியை சேர்ந்தவர் சிதம்பரம். இவர் தூத்துக்குடி 2ம் ரயில்வே கேட் அருகே ஐஸ்வர்யா கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
சில நாட்களுக்கு முன்பு இவர் தொழில் நிமித்தமாக தனது நண்பர் சுந்தரவேல்புரத்தை சேர்ந்த முருகன் என்பவருடன் காரில் திருப்பூருக்கு சென்றார். காரை பழையகாயல் இமாம்சாயி மரைக்காயர் மகன் முகமது நயினார் என்பவர் ஓட்டினார்.
திருப்பூரில் வேலையை முடித்துவிட்டு அவர்கள் தூத்துக்குடி நோக்கி வந்து கொண்டிருந்தனர். நள்ளிரவில் எட்டையாபுரம் அருகே சிந்தலக்கரை மெயின் ரோட்டில் வந்தபோது எதிரே வந்த ஒரு வாகனம் கார் மீது பயங்கரமாக மோதியது.
இதில் கார் அப்பளம் போல் நொறுங்கியதில் காரில் இருந்த சிதம்பரம் மற்றும் டிரைவர் முகமது ஆகியோர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக இறந்தனர். முருகன் படுகாயம் அடைந்தார்.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications