அணுசக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் தேச துரோகிகள் - சோனியா திடீர் பாய்ச்சல்
டெல்லி:
இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பவர்கள் தேசத்தின் வளர்ச்சியைத் தடுப்பவர்கள், தேசத்திற்கு துரோகம் செய்பவர்கள் என்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி காட்டமாக கூறியுள்ளார்.
ஹரியானா மாநிலம் ஜாஜ்ஜார் என்ற இடத்தில் ரூ. 7892 கோடி மதிப்பில் நிறைவேற்றப்படவுள்ள இந்திரா காந்தி சூப்பர் அணல் மின் நிலையத்திற்கான அடிக்கல் நாட்டு விழாவில் சோனியா காந்தி கலந்து கொண்டார்.
நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், நாட்டின் மின் தேவையை பூர்த்தி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது. அதனால்தான் அமெரிக்காவுடன் அணு சக்தி ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் அணு சக்தி ஒப்பந்தத்தை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க வேண்டும், அது கூடாது என்று சிலர் கூறி வருகிறார்கள். அதை எதிர்க்கிறார்கள். அப்படிச் செய்பவர்கள் காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் எதிரிகள். இந்த நாட்டின் வளர்ச்சியை விரும்பாதவர்கள்தான் இப்படி எதிர்பப்பார்கள். இது நாட்டுக்கு செய்யும் துரோகமாகும்.
இப்படிப்பட்டவர்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்ட வேண்டும் என்று காட்டமாக கூறினார் சோனியா காந்தி.
அணு சக்தி ஒப்பந்தத்தை கடுமையாக எதிர்த்து வரும் இடதுசாரிக் கட்சிகளை பெயர் குறிப்பிடாமல் தேச துரோகிகள் என சோனியா காந்தி விமர்சித்துள்ளது இடதுசாரிகளை கொந்தளிக்க வைத்துள்ளது.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி












Click it and Unblock the Notifications