திருநெல்வேலி அருகே மர்ம காய்ச்சலுக்கு குழந்தை, 2 பேர் பலி
புளியங்குடி:
புளியங்குடி அருகே மர்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரு குழந்தை உள்பட 3 பேர் பலியாகியுள்ளனர்.
நெல்லை மாவட்டம் புளியங்குடி அருகே உள்ள ராமசாமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆண்டார்குளம் கிராமம். இங்கு சுமார் 600 பேர் வசிக்கும் இந்த கிராமத்தில் கடந்த ஒரு மாத காலமாக பரவியுள்ள மர்ம காய்ச்சலால் ஏராளமானோர் அவதிப்பட்டு வருகின்றனர்.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் என 100க்கும் மேற்பட்டோருக்கு இந்த காய்ச்சல் பரவியுள்ளது.
இந்த ஊரைச் சேர்ந்த கூலித் தொழிலாளி ஹரிதாஸ் என்பவரின் 3 வயது பெண் குழந்தை இந்துமதி இந்நோய் தாக்கி பலியாகியுள்ளது.
இருபது நாட்களுக்கு முன் கருப்பன் என்பவரும், 10 நாட்களுக்கு முன் சொக்கலமேரி என்ற மூதாட்டியும் இந்த மர்ம காய்ச்சலுக்கு பலியாயகியுள்ளனர்.
இந்த மர்ம நோய் ஏற்பட்டவர்களுக்கு கை, கால், மூட்டு, உடல் எரிச்சல், முதுகுவலி, தூக்கமின்மை உள்ளிட்ட பல்வேறு பாதிப்பு ஏற்பட்டு வருவதாகவும் இப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.
தமிழக அரசு சார்பில் விஷக்காய்ச்சல் பரவியுள்ள இந்த பகுதியில் சிறப்பு மருத்துவ முகாமை நடத்த அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக குழந்தைகளை இந்த நோய் வெகுவாக பாதித்து வருவதால் இப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications
