திமுக அழிவே இல்லாத ஒரு ஜீவ நதி-கருணாநிதி
சென்னை: முரசொலி அலுவலகத்தில் ரிஷப்ஷனிஸ்டாக பணிபுரியும் லட்சுமிக்கும் சென்னையைச் சேர்ந்த சுரேசுக்கும் திருமணத்தை நடத்தி வைத்து கருணாநிதி பேசியதாவது,
இன்று நடைபெற்றுள்ள இந்த மணவிழா எல்லா வகையிலும் சிக்கனமான, மற்றவர்களுக்கு அதிகம் சிரமம் கொடுக்காத, ஒரு திருமணம் என்று சொன்னால் அது மிகையாகாது.
முரசொலியிலே வேலை பார்த்த லட்சுமிக்கு திருமணமும் முரசொலி அலுவலகத்திற்கு பக்கத்திலேதான் நடைபெறுகிறது என்பதால் என்னுடைய பிரயாணம் அதிக தொலைவு இல்லாமல் விரைவிலயே வந்து அவர்களை வாழ்த்துகின்ற வாய்ப்பு கிட்டியிருக்கிறது.
லட்சுமி தனது சுறுசுறுப்பாலும் நல்ல உள்ளத்தாலும் விடா முயற்சியாலும் எங்களைப் போன்றவர்களுடைய அன்பை பெற்றவர்.
அவருடைய கணவரக அமைந்துள்ள சுரேஷ் களைத்து அலுத்து வந்தால், லட்சுமி காட்டுகின்ற ஒரு புன்னகையிலேயே அந்த களைப்பெல்லாம் நீங்கி விடும் என்று அமைச்சர் வீராசாமி சொன்னார்.
வீராசாமி அந்த அனுபவத்தை அவருடைய வீட்டிலே பெற்றாரோ இல்லையோ மற்றவர்களுக்கு அத்தகைய அனுபவத்தினுடைய சுவையையும், சுகத்தையும், சொல்லி நம்முடைய பாராட்டுகளை அவர் பெற்றிருக்கின்றார்.
ஒரு அலுவலகத்திலே வேலை பார்க்கும்போது காட்டப்பட வேண்டிய அடக்கம், அறிவுச்செழுமை, விசுவாசம் இத்தனையும் ஒருங்கே அமையப் பெற்ற ஒரு பெண் தான் செல்வி லஷ்மி.
இங்கே வரவேற்புரையாற்றிய தம்பி அன்பழகன் போன்ற நல்ல உள்ளம் படைத்த இயக்கப் பற்றுக் கொண்டவர்கள் நம்மோடு இருக்கிறார்கள். திமுக என்ற இந்த இயக்கத்திற்கு என்றைக்கும் முடிவே கிடையாது. இது முடிவில்லாமல் ஓடிக்கொண்டிருக்கின்ற ஜீவ நதி என்றார் கருணாநிதி.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications