தமிழக அரசின் இலவச டிவி கேரளாவில் அமோக விற்பனை
கோவை: தமிழக அரசு வழங்கும் இலவச டிவி பெட்டிகள், கேரளாவில் நல்ல விலைக்கு விற்கப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திமுக தனது தேர்தல் அறிக்கையில் உறுதி கூறியபடி ஏழை, எளியோருக்கு இலவச டிவி பெட்டிகளை வழங்கி வருகிறது. பெரும் பொருட் செலவில் இந்தத் திட்டத்தை தமிழக அரசு அமல்படுத்தி வருகிறது. ஆனால் இடையில் புகுந்த சில விஷமிகள் அரசின் இந்தத் திட்டத்தை பயன்படுத்தி கொள்ளை லாபம் பார்த்து வருகின்றனர். இதனால் திமுக அரசுக்கு பெயர் கெடும் ஆபத்து ஏற்பட்டுள்ளது.
தமிழக அரசின் இலவச கலர் டிவி திட்டத்தின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் இலவச கலர் டிவி பெட்டிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
அதன்படி நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவுக்கு உட்பட்ட கீழ் குந்தா பேரூராட்சி, முள்ளிகூர், இத்தலார், பாலகொலா, குந்தா ஆகிய ஊராட்சிகளிலும் இந்த டிவி பெட்டிகள் வழங்கப்பட்டன. பிக்கட்டி
பேரூராட்சியில் மட்டும் இன்னும் தரவில்லை. குந்தா தாலுகாவில் மட்டும் ஏறக்குறைய 12 ஆயிரத்திற்கும் அதிகமான டி.வி. கள் இலவசமாக வழங்கப் பட்டுள்ளது.
ஆனால் டிவி வாங்கியவர்கள் பெரும்பாலானவர்களின் வீடுகளில் ஏற்கனவே கலர் டிவி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் பலரது வீடுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட டிவிகள் உள்ளனவாம்.
இதை தங்களுக்கு சாதக மாக்கி கொண்ட சில வியாபாரிகள், கூடுதல் டிவி வைத்திருப்போரை அணுகி ஒரு பெட்டி ஆயிரம் ரூபாய் என்று விலை பேசி வாங்கியுள்ளனர்.
பின்னர் அதை நீலகிரி, கோவை மாவட்டங்களை ஒட்டியுள்ள கேரள பகுதிகளில் ரூ. 2000 முதல் 2500 ரூபாய் வரை விலை வைத்து விற்று வருகின்றனர்.
ஏற்கனவே நெல்லையில் சில டிவி கடைகளிலேயே பகிரங்கமாக இலவச டிவியை சில மாதங்ளுக்கு முன்பு சிலர் விற்று பரபரப்பை ஏற்படுத்தினர். ஆனால் இந்த டிவிகள் தவறுதலாக கடைகளுக்குப் போய் விட்டதாக சம்பந்தப்பட்ட டிவி நிறுவனம் விளக்கியதால் சர்ச்சை ஓய்ந்தது.
ஆனால் இப்ேபாது தமிழக அரசின் இலவச கலர் டிவி பெட்டிகள் கேரளாவில் அமோகமாக விற்கப்படுவதாக வெளியாகியுள்ள செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசு உடனடியாக நடவடிக்கையில் இறங்கி இடையில் புகுந்து இதுபோன்ற வியாபாரிகளை தட்டி வைக்காவிட்டால், அரசுக்குக் கெட்ட பெயரை ஏற்படுவதைத் தவிர்க்க முடியாது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications