நெல்லை, தூத்துக்குடியில் கனமழை- பல கிராமங்களை வெள்ளம் சூழ்ந்தது
திருநெல்வேலி: நெல்லை-தூத்துக்குடி மாவட்டத்தில் விடிய விடிய மழை பெய்து வருவதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
நேற்று இரவு முழுவதும் மழை கொட்டியதால் விளாத்திகுளம் சுற்று வட்டார பகுதிகளில் 6 கண்மாய்கள் உடைந்து பல ஊர்களுக்குள் வெள்ளம் புகுந்ததது. இதனால் அப் பகுதி மக்கள் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
கடையநல்லூர் பகுதியில் பெய்த மழையால் பாப்பான் கால், சீவலங்கால் மற்றும் பெரியாற்று படுகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இன்று அதிகாலை 2 மணி அளவில் பாப்பான்கால் வாயில் திடீரென வெள்ளப்பெருக்கு அதிகமானது.
இதனால் கடையநல்லூர், முத்துகிருஷ்ணாபுரம், பாப்பான்கால்வாய், கரையோர பகுதிகளில் உள்ள 50 வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது. அங்கு வசிப்பவர்கள் அவசர, அவசரமாக வெளியேறி மேடான பகுதிக்கு சென்றனர்.
மேலக்கடையநல்லூரில் உள்ள அண்ணாமலை நாதர் கோயில் குளம் உடைந்து அருகில் உள்ள வயல்களில் தண்ணீர் புகுந்தது. தற்போது அந்த பகுதிகளில் நெல் நாற்று பாவியிருந்தனர். அவை அனைத்தும் தண்ணீரில் முழ்கியுள்ளன.
மழையால் கடையநல்லூர் எம்.எல்.ஏ அலுவலக கம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்தது. இதேபோல் பாப்பான்கால்வாய் கரையில் உள்ள பல வீடுகளின் கம்பவுண்ட் சுவர்களும் இடிந்தன. விடிய விடிய பெய்த மழையால் கடையநல்லூர் நகரமே வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல குளங்கள் உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு












Click it and Unblock the Notifications