அமைச்சர் ஆவாரா கனிமொழி?
சென்னை: திமுக எம்.பியும், முதல்வர் கருணாநிதியின் மகளுமான கனிமொழி மத்திய அமைச்சராகக் கூடும் என்பதை முதல்வர் கருணாநிதி சூசகமாக உணர்த்தியுள்ளார்.
திமுகவுக்கும், சன் டிவிக்கும் இடையிலான உறவு முறிந்ததும், தனது மத்திய அமைச்சர் பதவியை தயாநிதி மாறன் ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து கனிமொழி ராஜ்யசபா எம்.பி. ஆக்கப்பட்டார். அவர் அமைச்சராக்கப்படலாம் என்றும் தயாநிதி மாறன் வகித்த தொலைத் தொடர்புத் துறை அவருக்கு ஒதுக்கப்படலாம் என்றும் பேச்சு கிளம்பியது.
இருப்பினும் உடனடியாக கனிமொழி அமைச்சராக்கப்படவில்லை. இருப்பினும் டெல்லியில் நல்ல அனுபவம் கிடைத்த பின்னர் கனிமொழி அமைச்சராக்கப்படக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் கனிமொழிக்கு மத்திய அமைச்சர் பதவி தரப்படுமா, அவர் அமைச்சராக்கப்படுவாரா என்ற கேள்விக்கு முதல்வர் கருணாநிதி முன்பு போல எதிர்மறையாக இல்லாமல், சூசகமாக சாதகமாக பதிலளித்துள்ளார்.
இதுகுறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்கையில், எப்போதாவது ஆகலாம் என்று புன்னகையுடன் கூறியுள்ளார். இதன் மூலம் விரைவில் கனிமொழி அமைச்சர் ஆகக் கூடும் என்பதை முதல்வர் கருணாநிதி சூசகமாக தெரிவித்துள்ளதாக கருதப்படுகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது சீனப் பயணத்தை முடித்து விட்டு நாடு திரும்பியதும், பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவையில் மாற்றம் செய்வார் என்ற எதிர்பார்ப்பு நிலவி வரும் சூழ்நிலையில் முதல்வர் கருணாநிதியின் இந்த பதில், கனிமொழிக்கு விரைவில் அமைச்சர் பதவி கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications