கமலா அம்மாள் உடல் தகனம்: திரையுலகம் இறுதி அஞ்சலி
சென்னை: மறைந்த நடிகர் சிலகம் சிவாஜி கணேசனின் மனைவி கமலா அம்மாள் உடல் இன்று தகனம் செய்யப்பட்டது. அவருக்கு திரையுலகினர் திரண்டு வந்து இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கமலா அம்மாள் நேற்று முன்தினம் மூச்சு திணறல் ஏற்பட்டு மரணமடைந்தார். அவரது உடலுக்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், சிவாஜி ரசிகர்கள் உட்பட ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர்.
சிவாஜிகணேசன், கமலா அம்மாள் தம்பதியினரின் மகள்களான சாந்தி மற்றும் தேன்மொழி இருவரும் வெளிநாட்டில் இருந்ததால் அவர்கள் வரும் வரை இறுதிச் சடங்குகள் தள்ளிப் போடப்பட்டு இன்று உடல் தகனம் நடந்தது.
நேற்று சாந்தி வந்து சேர்ந்தார். தேன்மொழி இன்று அதிகாலை சென்னைக்கு வந்து சேர்ந்தார். இரு மகள்களும் தாயாரின் உடலைப் பார்த்து கதறி அழுதது நெஞ்சை உறுக்குவதாக இருந்தது.
இன்று காலை இறுதிச் சடங்கு நடந்தது. ஆம்புலன்ஸ் வேனில் கமலா அம்மாளின் உடல் ஏற்றப்பட்டு ஊர்வலமாக பெசன்ட் நகர் சுடுகாட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது.
இறுதிச் சடங்கில் நடிகர்கள் ரஜினிகாந்த், சரத்குமார், விஜயக்குமார், சத்யராஜ், ராஜேஷ், நெப்போலியன், பாஜக மாநில தலைவர் இல.கணேசன், கராத்தே தியாகராஜன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு இறுதி அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் கமலா அம்மாளின் உடல் மின் தகன மேடையில் வைத்து தகனம் செய்யப்பட்டது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications