17ம் தேதி முதல் சேலம்-விருத்தாசலம் பயணிகள் ரயில்
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலம்-விருத்தாசலம் அகல ரயில் பாதையில் பயணிகள் ரயில் வரும் 17ம் தேதி முதல் இயக்கப்படும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.
சேலம்-விருத்தாசலம் இடையே உள்ள பாதை அகல ரயில் பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பதையில் கடந்த 8ம் தேதி தீபாவளியன்று சரக்கு ரயில் போக்குவரத்து துவக்கப்பட்டது.
பயணிகள் ரயில் போக்குவரத்தும் விரைவில் துவங்கப்படும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்திருந்தது. இந் நிலையில் சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி போலா சிங் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
இந்தப் பாதையில் பயணிகள் ரயில் போக்குவரத்து வரும் 17ம் தேதி முதல் துவக்கப்படும். மக்களின் ஆதரவை பொறுத்து தினசரி எத்தனை முறை ரயில் விடுவது என முடிவு செய்யப்படும்.
இதற்கான அறிவிப்பை மத்திய ரயில்வே இணை அமைச்சர் வேலு முறைப்படி அறிவிப்பார். இதற்கான விழா விருத்தாசலத்தில் நடக்கும் என்றார்.












Click it and Unblock the Notifications