வாகனங்களுக்கான விதிமுறையில் பாரபட்சம் - சரத்குமார் எதிர்ப்பு
சென்னை: தமிழக அரசு சுற்றுலா வாகனங்களுக்கும், மற்ற வாகனங்களுக்கும் இடையில் பாரபட்சம் காட்டுவதும், தனித்தனி விதிமுறைகளை அமல்படுத்துவதும் முற்றிலும் தவறானது என்று அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் சரத்குமார் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுற்றுலா வாகனங்களுக்கு 7 ஆண்டுகளுக்கு மேல் பர்மிட் நீட்டிப்பு இல்லை என்று தமிழக போக்குவரத்துத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
அரசின் உத்தரவு சுற்றுலாத் தொழிலை பாதிக்கும். தமிழகத்தில் சுமார் 95 லட்சம் இரு சக்கர, நான்கு சக்கர வாகனங்கள் ஓடும்போது, 75,000 சுற்றுலா வாகனங்களுக்கு மட்டும் 7 ஆண்டு வரம்பு விதிப்பது எப்படி நியாயமாகும்.
அரசு பேருந்துகள், மாநகராட்சி லாரிகள் மற்றும் இதர அரசு வாகனங்கள் எத்தனையோ ஆண்டுகளை கடந்த பின்னரும் சாலையில் ஓடுவதற்கு அனுமதி அளிக்கலாமா போன்ற கேள்விகளுக்கு அரசு விளக்கம் அளிக்க வேண்டும்.
சுற்றுலா வாகனங்களுக்கும், மற்ற வாகனங்களுக்கும் இடையில் பாரபட்சம் காட்டுவதும் தனித்தனி விதிமுறைகளை அமல்படுத்துவதும் முற்றிலும் தவறானதாகும்.
எனவே, இத்துறையில் தொடர்புடைய அனைவருடைய யோசனைகளையும் கேட்டறிந்த பின்னரே அரசு மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சரத்குமார் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications