மோசடியில் ஈடுபட்ட ஹோட்டல் அதிபர் தலைமறைவு
மதுரை: மதுரையில் மோசடியில் ஈடுபட்ட ஹோட்டல் அதிபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை மேலமாசி வீதியை சேர்ந்தவர் அடைக்கலம். இவர் துபாய் செல்ல மதுரையில் உள்ள டிராவல் ஏஜென்ஸி நடத்தும் விஜயன், சங்கரலிங்கம் ஆகியோரிடம் கடந்த 4 மாதங்களுக்கு முன் பணம் ரூ.75,000 கொடுத்துள்ளார்.
விஜயனும், சங்கரலிங்கமும் மதுரை பெரியார் பஸ் நிலையம் மேல பெருமாள் கோவில் மேஸ்திரி தெருவில் டிராவல் ஏஜென்ஸி நடத்தி வரும் சுவான் என்பவரிடம் பாஸ்போர்ட் பெற பணம் கொடுத்துள்ளனர்.
ஆனால், சுவான் பாஸ்போர்ட்டும் தரவில்லை, பணத்தையும் திருப்பித் தரவில்லை. இதனால் அவர்களுக்குள் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பில் முடிந்தது.
இந் நிலையில் அடைக்கலம் மதுரை நீதிமன்றத்தில் தனக்கு பாஸ்போர்ட் பெற்று தருவதாக கூறி சுவான், விஜயன், சங்கரலிங்கம் ஆகியோர் ரூ.75,000 பெற்றுக் கொண்டு ஏமாற்றி வருவதாக வழக்கு தாக்கல் செய்தார்.
அந்த வழக்கை விசாரித்த நீதிபதி, அடைக்கலத்தின் மனுவை ஏற்றுக் கொண்டு சுவான், விஜயன், சங்கரலிங்கம் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யுமாறு மதுரை மாநகர் குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். அதனையடுத்து வழக்குப் பதிவு போலீசார் சுவானை கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய விஜயன், சங்கரலிங்கம் ஆகிய இருவரும் தலைமறைவாகிவிட்டனர்.
இதில் விஜயன் என்பவர் மதுரையில் உள்ள பிரபல ஹோட்டலின் அதிபர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’ -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications