மு.க.ஸ்டாலினை முதல்வராக்க கோரும் மதுரை ஆதீனம்!

இதுவரை திமுகவை விமர்சித்து வந்த ஆதீனம் நடராஜனின் நிழல் போல அவருடனேயே இருப்பவர்.
கடந்த சட்டசபைத் தேர்தலின்போது அதிமுக கூட்டணிக்கு கார்த்திக் உள்ளிட்டவர்களைக் கொண்டு வர நடராஜனுடன் இணைந்து தீவிரமாக செயல்பட்டார்.
மேடை தோறும் திமுகவை சாடிப் பேசுவது ஆதீனத்தின் வழக்கம். இந் நிலையில் திருநெல்வேலி திமுக மாநாட்டைத் தொடர்ந்து ஸ்டாலினுக்கு துணை முதல்வர் தரப்படலாம் என்ற பேச்சு நிலவும் நிலையில், திடீரென மு.க.ஸ்டாலினிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைக்கலாம் என ஆதீனம் கூறியுள்ளார்.
திருச்சியில் மனித உரிமைகள் தன்னார்வ தொண்டு கழகம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. அதில் ஆதீனம் கலந்து கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், தமிழக அரசு மிகச் சிறந்த முறையில் செயல்படுகிறது. முதல்வர் கருணாநி மக்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி வருகிறார். இது சந்தோஷம் தருகிறது.
தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கு சிறப்பான முறையில் திருப்பணிகளை செய்து வருகிறார். இந்தகைய செயல்கள் மன நிறைவை தருகிறது.
இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள சில கோவில்களில் பணியாளர்கள் பற்றாக்குறை உள்ளது. அதை அரசு நிவர்த்தி செய்ய வேண்டும்.
நெல்லை மாநாடு திருப்பம் தரும்
நெல்லையில் நடைபெறவுள்ள திமுக இளைஞர் அணி மாநாடு மூலம் தமிழகத்தில் ஒரு திருப்பு முனை ஏற்படும். உள்ளாட்சி துறை அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் ஆட்சி பொறுப்பை ஒப்படைத்தால் திறமையாக செயல்படுவார்.
நடிகை குஷ்பு தெய்வ காரியங்களில் கலந்து கொள்ளும் போது கண்ணியத்துடன் நடந்து கொள்ள வேண்டும். அப்படி அவர் நடக்காது கண்டிக்கதக்கது.
சேது சமுத்திர திட்டம் வெற்றி பெருவது மத்திய மாநில அரசுகளின் கையில் தான் உள்ளது. இந்து மக்களுக்கு பாதிப்பு வராத வண்ணம் செயல்படுத்த வேண்டும். அப்படி செய்வது மத்திய மாநில அரசுகளின் கடமையாகும். இதில் அரசியல் கலப்பு இருக்கூடாது.
எம்.எல்.ஏ, எம்.பி இறந்தால் அந்த தொகுதியில் இடைத்தேர்தல் நடத்தப்படுகிறது. அப்படி செய்வதால் அங்கு தேர்தலின் போது வன்முறை ஏற்படுகிறது. அரசுக்கு கூடுதல் செலவு ஆகின்றது. எனவே இடைத் தேர்தல்களை நடத்தப்படுவது தவிர்க்க வேண்டும் என்றார் ஆதீனம்.
ஆதீனத்தின் பேச்சு திமுகவை விட அதிமுக தரப்பில் தான் அதிக பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமீப காலமாக நடராஜன் பங்கேற்கும் விழாக்களில் ஆதீனத்தை பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
-
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்!












Click it and Unblock the Notifications