For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆங்கிலத்தில் கேட்டால் தாய் மொழியில் பதில்

By Staff
Google Oneindia Tamil News

Google logo
மும்பை:ஆங்கிலத்தில் விவரத்தைக் கேட்டு இந்திய மொழிகளில் பதிலைப் பெறும் வசதியை கூகுள் இணையதளம் விரைவில் அறிமுகப்படுத்தவுள்ளது.

Cross-Language Information Retrieval எனப்படும் இந்த வசதியில் நாம் நமக்குத் தேவையான தகவலை ஆங்கிலத்தில் கேட்கலாம். ஆனால் அதற்கான பதில்கள், நமது தாய் மொழியிலேயே கிடைக்கும்.

சி.எல்.ஐ.ஆர். எனப்படும் இந்த வசதியை கடந்த மே மாதம் 15 சர்வதேச மொழிகளில் கூகுள் அறிமுகப்படுத்தியது. அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்திருப்பதால், இந்திய மொழிகளிலும் இதை விரிவுபடுத்தவுள்ளனர்.

இதுகுறித்து கூகுள் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த பி.நாயக் கூறுகையில், முதலில் 15 சர்வதேச மொழிகளில் இதை அறிமுகப்படுத்தினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து இந்திய மொழிகளிலும் இதை அறிமுகப்படுத்த யோசித்து வருகிறோம்.

இந்தியாவைப் பொறுத்தவரை தமிழும், இந்தியும்தான் இணையதளங்களில் அதிகம் பயன்படுத்தப்படும் மொழியாக உளளது. எனவே இந்த மொழிகளில் இந்த மொழிமாற்று தகவல் வசதி அறிமுகப்படுத்தப்படக் கூடும்.

ஆங்கிலத்தை அடிப்படையாகக் கொண்ட சர்ச் என்ஜின்களின் டேட்டா பேஸ் மிகப் பெரியது, நிறைய தகவல்களும் கிடைக்கும். அதேசமயம், அரபி, சைனீஸ் போன்ற சிறிய மொழிகளும் உள்ளன. ஆங்கிலத்துடன் ஒப்பிடுகையில் இந்த மொழிகளில் அதிக தகவல்கள் கிடைக்காது. ஆனால் சி.எல்.ஐ.ஆர். வசதி இதை போக்குகிறது ென்றார் அவர்.

சி.எல்.ஐ.ஆர் வசதிப்படி, ஒருவர் தனது தேவையை ஆங்கிலத்தில் கூகுள் சர்ச் என்ஜினில் தெரிவித்தால், அந்தத் தகவல், அவர் விரும்பும் மொழியில் கிடைக்கும். உதாரணத்திற்கு பிரெஞ்சில் தகவல் வேண்டும் என்று விரும்புவோருக்கு, அதுகுறித்த விவரத்தை ஆங்கிலத்தில் கொடுத்தால், முழுத் தகவல்களும் பிரெஞ்சு மொழியில் கிடைக்கும். அதை அவுட்புட் ஆகவும் எடுத்துக் கொள்ளலாம்.

தற்போது அமலில் உள்ள 15 சர்வதேச மொழிகளில் இந்த சேவையைப் பெற http://www.translate.google.com/ என்ற இணையதளத்தை அணுகலாம்.

விரைவில், இட்லிக்கு அர்த்தம் என்ன என்று ஆங்கிலத்தில் கேட்டால் தமிழில் சுடச் சுட தகவல் கிடைக்கும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X