மழையில் குழந்தைகளுடன் 2 நாள் தவித்த அகதிகள்
ராமேஸ்வரம்: இலங்கையிலிருந்து ராமேஸ்வரத்திற்கு அகதிகளாக வந்த 2 பெண்கள் உள்ளிட்ட 6 பேர், வெட்ட வெளியில், கொட்டும் மழையில் 2 நாட்கள் பரிதவித்தனர். அவர்களை போலீஸார் மீட்டு முகாமில் சேர்த்தனர்.
இலங்கையின் கிளிநொச்சி மற்றும் மன்னார் பகுதிகளைச் சேர்ந்த 2 பெண்கள் உள்பட 6 பேர் ஒரு படகில் தமிழகத்திற்குத் தப்பி வந்தனர். இவர்கள் படகில் வந்தபோது கடலில் ஏற்பட்ட கொந்தளிப்பு காரணமாக அரிச்சல்முனை பகுதியில் இவர்களை இறக்கி விட்டு விட்டு படகோட்டி போய் விட்டார்.
அப்போது பலத்த மழை கொட்டியது. இரு குழந்தைகளுடன் இந்த 6 பேரும் வெட்ட வெளியில், மழையில் நனைந்தபடி இரு நாட்கள் பரிதவித்தனர். தகவல் அறிந்ததும் தனுஷ்கோடி போலீஸார் விரைந்து சென்று இவர்களை மீட்டு விசாரணைக்குப் பின்னர் மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
தமிழர் பகுதிகளில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாகவும், வெளியில் நடமாடக் கூட முடியவில்லை, அத்தியாவசியப் பொருட்கள் கிடைப்பதில்லை, தினசரி சாப்பாடு என்பதே கனவாக மாறியுள்ளது என்று அகதிகள் மிகுந்த வேதனையுடன் தெரிவித்தனர்.
உணவுப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதால், விலை மிகக் கடுமையாக உயர்ந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
இனியும் வசிப்பது கடினம் என்ற நிலை ஏற்பட்டதால்தான் தங்களது உயிரைப் பணயம் வைத்து, தலா ரூ.15,000 படகுக் கட்டணமாக செலுத்தி தப்பி வந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications