இன்னொரு போலி-சிக்கலில் குன்றத்தூர் ஜடாமுடி சாமியார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் பீர் சாமியார் பழனிச்சாமியைத் தொடர்ந்து குன்றத்தூர் அருகே ஜடாமுடி சாமியார் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆசிரமம் நடத்தி குறி சொல்வதாக கூறி பெண்களின் கற்பை சூறையாடியதாகக் கூறப்படும் பழனிச்சாமி என்பவரை போலீசாரை கடந்த வாரம் கைது செய்தனர். மூன்று திருமணங்கள் செய்த இந்த சாமியார் ராகுல் என்ற வாலிபரை நரபலி கொடுத்திருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது.

இந் நிலையில் உளவுப் பிரிவு போலீசார், சென்னையில் உள்ள போலிச் சாமியார்கள் பற்றி பட்டியல் தயாரித்து வருகின்றனர். முதல் கட்டமாக சுமார் 50 குறி சொல்லும் சாமியார்கள் மீது உளவுப் பிரிவு போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

இவர்களில் சிலர் பெண்கள் விஷயத்தில் படுமோசம் என்பதும் தெரியவந்துள்ளது.

உளவுப் பிரிவு போலீசார் தந்த தகவல்களின் அடிப்படையில் குன்றத்தூரை சேர்ந்த ஜடாமுடி சாமியார் தனமூர்த்தி(42) என்பவர் பிடிபட்டுள்ளார். குன்றத்தூர் பேருந்து நிலையம் பின்புறம் உள்ள முத்தாலம்மன் தெருவில் குறி சொல்லி வரும் இவர் இங்குள்ள கோவிலில் முக்கிய நாட்களில் சிறப்பு பூஜைகள் நடத்துவார்.

இவர் மீது சமீப காலமாக நிறைய கசமுசா புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. தி.நகரைச் சேர்ந்த ஒரு பெண்ணை இவர் வசியம் செய்து தன்னுடன் வைத்திருப்பதாக அந்தப் பெண்ணின் உறவினர்கள் புகார் கூறியுள்ளனர்.

இந் நிலையில் உளவுப் பிரிவு போலீசார் இன்று காலை இந்த சாமியாரிடம் விசாரணை நடத்தினர். பின்னர் தனமூர்த்தியை குன்றத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.

அவரிடம் பூஜை முறைகள், கோவில் வரவு-செலவு கணக்கு போன்றவற்றை கேட்டனர். பின்னர் தி.நகர் பெண் குறித்து விவரம் கேட்டனர்.

தி.நகரைச் சேர்ந்த அந்தப் பெண் கால் சென்டரில் பணியாற்றி வருகிறார். தன்னுடன் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார். காதலரின் மனதை மாற்றி, தன் பக்கம் ஈர்க்க நினைத்த அவர் குன்றத்தூர் சாமியாரின் உதவியை நாடியுள்ளார்.

காதலனை வசியம் செய்ய வந்த அவரை தனமூர்த்தி வளைத்துள்ளார் என போலீசார் கூறுகின்றனர். ஆனால், இந்தப் புகாரை சாமியார் தனமூர்த்தி திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

நான் போலிச் சாமியார் அல்ல, ஆன்மீகவாதி. குன்றத்தூர் முத்தாலம்மன் கோவிலை நாங்கள் பரம்பரை, பரம்பரையாக பராமரித்து வருகிறோம். இந்த கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்தது.

இக்கோவிலின் ஒரு பகுதியை இந்த ஊர்க்காரர்கள் இறுதி அஞ்சலி சடங்கு நடத்தும் இடத்துக்காக கேட்டனர். நான் கொடுக்க மறுத்து விட்டேன். இதனால் ஆத்திரத்தில் இருக்கும் இந்த பகுதி மக்கள் என் மீது ஆதாரம் இல்லாத புகார்களை சொல்லி வருகிறார்கள். நான் எந்த தவறும் செய்யவில்லை என்று கூறியுள்ளார் சாமியார்.

10 ஆண்டுகளுக்கு முன்பு தனமூர்த்தி குன்றத்தூரில் பெட்டிக்கடை வைத்திருந்தாராம். அந்தக் கடையை ரவுடிகள் சிலர் அடித்து நொறுக்கி விட்டதையடுத்து பிழைப்புக்கு வழி தெரியாமல் திண்டாடியவர் திடீரென சாமியாராகி குறி சொல்ல தொடங்கியுள்ளார்.

இதற்கிடையே குன்றத்தூரை சேர்ந்த சுந்தரம் என்பவர் இந்து அறநிலையத்துறையிடம் ஒரு புகார் கொடுத்திருந்தார். அதில், குன்றத்தூர் முத்தாலம்மன் கோவிலில் வரும் வருமானத்தை தனமூர்த்தி தன் சுய லாபத்துக்கு பயன்படுத்துகிறார். இதை தட்டி கேட்டால் அடியாட்களை வைத்து மிரட்டுகிறார். எனவே கோவில் நிர்வாகத்தை அவரிடம் இருந்து மீட்கவேண்டும் என்று கூறி இருந்தார். ஆனால், இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+