சவேரா ஹோட்டல் விபத்து: பலி 3 ஆனது-ஹோட்டல் அதிபர் கைது
சென்னை: சென்னை மயிலாப்பூர் சவேரா ஹோட்டலில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின்போது நீச்சல்குளத்தின் மீது போடப்பட்ட மேடை சரிந்து ஏற்பட்ட விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 ஆக உயர்ந்தது. இன்று ஆனந்த் என்ற தகவல் தொழில்நுட்பவியல் மாணவரும், தன்யா என்ற இளம்பெண்ணும் உயிரிழந்துவிட்டனர்.
டிசம்பர் 31ம் தேதி இரவு மயிஸலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள சவேரா ஹோட்டல் வளாகத்தில் புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடந்தன. இதற்காக நீச்சல் குளத்தின் மீது சாதாரண கட்டைகளால் மேடை அமைக்கப்பட்டு அதில் டான்ஸ் பார்ட்டி நடந்தது.
அப்போது திடீரென மேடை சரிந்ததில், பலர் நீச்சல் குளத்தில் விழுந்தனர். இதில் நீரில் மூழ்கி உ.பியைச் சேர்ந்த சாப்ட்வேர் என்ஜீனியர் சுனில் அக்னிஹோத்ரி பலியானார்.
பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக ஹோட்டல் மேலாளர் மைக்கல் அந்தோணி, மேடை அமைக்கும் காண்டிராக்டை பெற்ற நரேந்திர சிங்கின் மேலாளர் ரவி உள்ளிட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர். நரேந்திர சிங் மற்றும் ஹோட்டர் பார் பொறுப்பாளர் சம்பத் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.
இந்த நிலையில் இன்று காலை ஹோட்டல் அதிபர் பி.வி.ரெட்டி கைது செய்யப்பட்டார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் ரெட்டி ஜாமீனில் விடுதலையாகி விட்டார்.
மேலும் இருவர் சாவு:
இந்த நிலையில் இந்த விபத்தில் சிக்கி படுகாயமடைந்து அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3ம் ஆண்டு தகவல் தொழில்நுட்பவியல் மாணவர் ஆனந்த் (21) இன்று மாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதே போல் ஆனந்தின் ஒன்று விட்ட சகோதரி தன்யாவும் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வந்தார். அவரும் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
ரெட்டி கைது செய்யப்பட்ட சில மணி நேரங்களில் ஆனந்த்தின் உயிர் போனது குறிப்பிடத்தக்கது.
-
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications