கூலி உயர்வில்லாததால் 5 லட்சம் பீடித் தொழிலாளர்கள் பாதிப்பு
நெல்லை: நெல்லை மாவட்டத்தில் உள்ள பீடித் தொழிலாளர்களுக்கு அரசு அறிவித்தபடி குறைந்தபட்ச கூலி உயர்வை வழங்காததால் 5 லட்சம் பீடித் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் சுமார் 2.5 லட்சம் பேர் தினக்கூலி அடிப்படையில் பீடி சுற்றி வருகின்றனர். மாவட்டத்தில் 50 பதிவு பெற்ற பீடி தயாரிக்கும் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இவர்களிடம் ஏஜென்டாக மாவட்டம் முழுவதும் லைசென்ஸ் பெற்ற காண்டரக்டர்கள் 1,500
பேர் உள்ளனர்.
இது தவிர டிரேட் மார்க் கம்பெனிகள் சுமார் 500 காண்ட்ராக்ட் கடைகளை நடத்தி வருகின்றன. பீடி தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச கூலி நிர்ணய அரசாணைப்படி கடந்த 2007 ஏப்ரல் 1ம் தேதி முதல் 1000 பீடிக்கு ரூ.66.96 கூலியாக வழங்க வேண்டும். மேலும் கடந்த 2006ம் ஆண்டு அக்டோபர் 30ம் தேதியன்று நடந்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் 1000 பீடிக்கு அகலவிலைப்படி உயர்வு, விடுப்புச் சம்பளம், அனைத்தும் சேர்த்து அடிப்படை ஊதியத்தில் 3 ரூபாய் கூடுதலாக வழங்க வேண்டும்.
ஆனால் பல பீடி நிறுவனங்கள் இந்த தொகையை வழங்கவில்லை என தொழிலாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் தங்களுக்கு கிடைக்க வேண்டிய 100 கோடி ரூபாய் கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
அரசு அறிவித்த ஊதிய உயர்வை திருச்சி, வேலூர், சென்னை, ஈரோடு மாவட்டங்களில் உள்ள பீடி தயாரிப்பு நிறுவனங்கள் வழங்கி விட்டது. ஆனால் நெல்லை மாவட்டத்தில் உள்ள சில பீடி நிறுவனங்களின்
உரிமையாளர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த ஆண்டு செப்டம்பர் 8ம் தேதியன்று மதுரை உயர் நீதிமன்ற பெஞ்ச் ஊதிய உயர்வு தொடர்பான அரசானையை உறுதி செய்த பின்னரும் இன்று வரை இறுதி அரசாணை பிறபிக்கப்படவில்லை. ஒரு காலத்தில் வருங்கால வைப்பு நிதி துறையில் பதிவு பெற்ற தொழிலாளர்கள் 5.5 லட்சம் பேர் இருந்தனர்.
பீடி தயாரிப்பு நிறுவனங்களை விட இடைதரகர்கள் போல் செயல்படும் காண்ட்ராக்டர்களால் பாதிக்கப்படுவதாக பீடி சுற்றும் தொழிலாளர்கள் கூறுகின்றனர். இவர்களிடம் பதிவு பெறாமல் வெறும் சிட்டையில் பீடி சுற்றும் தொழிலாளர்கள் மட்டும் 2.5 லட்சம் பேர் உள்ளனர்.
இவர்களுக்கு பென்சன், வீடு கட்டுவதற்கான மானியம், குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை, மருத்துவ வசதி, போனஸ், லீவு சம்பளம் ஆகியவை கிடைப்பதில்லை.
1000 பீடிக்கு 500 கிராம் இலைக்கு 200 கிராம் தூள் வழங்க வேண்டும். இவற்றில் தரமற்ற இலை மற்றும் தூள் காரணமாக 600 முதல் 700 பீடிகள் மட்டுமே சுற்றப்படுகின்றன. இதனால் தங்களது சொந்த பணத்தில் வெளி மார்கெட்டில் இலை, தூள் வாங்கி ஈடுகட்டுகின்றனர்.
வாரக் கடைசியில் கிடைக்கும் கூலி வெளிமார்கெட்டில் வாங்கும் இலை மற்றும் தூளுக்குதான் பயன்படுகிறது.
காண்ட்ராக்டர்களுக்கு 100 பீடிகள் கமிஷனாக வழங்க வேண்டிய நிலையில் சுற்று சரியில்லை என்று கழிக்கப்படும் பீடிக் கட்டுகளையும், கான்ட்ராக்டர்களே எடுத்து கொள்கின்றனர். தரமற்ற இலை காரணமாக பீடிகளை குறைவாக வழங்கினால் மறுநாள் வேலை தர மறுக்கின்றனர்.
பீடி தயாரிப்பு நிறுவனங்களை விட இடைத்தரகர்களாக செயல்படும் கான்ட்ராக்டர்கள் தான் அதிக பலனடைகிறார்கள். இந்த முரண்பாட்டை நீக்கக் கோரி பீடித் தொழிலாளர்கள் கடந்த ஆண்டில் மட்டும்
100க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
இது போன்ற குறைகளை களைவதற்கு அரசு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன் மதுரை உயர் நீதிமன்றம் உறுதி செய்த ஊதிய உயர்வை உடனடியாக பீடி தயாரிப்பு நிறுவனங்கள் வழங்குவதற்கு தமிழக அரசு இறுதி அரசாணை பிறபிக்க வேண்டும் என்று நெல்லை, தூத்துக்குடி மற்றும் குமரி மாவட்டத்தில் உள்ள பீடித் தொழிலாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
-
Jayalalitha: நானும் ஜெயலலிதாவும் சர்ச் பார்க் பள்ளியில்தான் படித்தோம்! மணப்பாறையில் கனிமொழி பேச்சு -
ரஷ்ய கஜானாவில் அடி.. இந்தியாவுக்கு ஓடி வந்த புடின் அரசு.. LPG பிரச்சனைக்கு வழிபிறந்தது? -
இந்தோனேஷிய கடலில் அது பாட்டுக்கு போகுது.. உலகமே வியப்பில் உறைந்திருச்சு! விலகிய 40 கோடி வருஷ மர்மம் -
விலகினார் திருமாவளவன்.. சட்டசபை தேர்தலில் போட்டியில்லை என அறிவிப்பு.. பின்வாங்கியது ஏன்? விளக்கம் -
ஈரான் போரை வைத்து பணம் பார்க்கும் டிரம்ப் வாரிசுகள்.. நடுவில் சிக்கிக்கொண்ட அரபு நாடுகள்! -
சிங்காநல்லூர் காங்கிரஸ் வேட்பாளர் ஶ்ரீநிதி அண்ணாமலை ஆதரவாளராமே.. போராட்டத்தில் குதித்த கதர்கள் -
அமெரிக்க கோட்டையில் ஓட்டை! ஈரானின் 'துல்லிய' ட்ரோன் தாக்குதல்: சிதறிய சி.ஐ.ஏ ரகசியங்கள்! -
Sundar C: ஏங்க கனிமொழி மட்டும் தூத்துக்குடிக்காரங்களா? நானும் மதுரைக்காரன்தான்! சுந்தர் சி விமர்சனம் -
தமிழ் புத்தாண்டு பலன்: விருச்சிக ராசிக்கு 9 இல் குரு.. தொட்டதெல்லாம் தங்கமாகப் போகுது -
குஷ்புவிடம் 3.5 கிலோ தங்கம், 24.3 கிலோ வெள்ளி இருக்கு.. சுந்தர்.சி சொத்து மதிப்பு எவ்வளவு? -
டாக்டர் படிப்பை முடித்த அனிதா சம்பத்.. உருக்கமாக சொன்ன தகவல்! கடைசியில் இப்படி ஆகிடுச்சே! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் உச்சவரம்பு நீக்கம்.. ரிசர்வ் வங்கி மக்களுக்கு ஜாக்பாட்.. சாதக, பாதகம் என்ன












Click it and Unblock the Notifications