பிணத்தை புதைப்பதில் ஜாதி சண்டை!
கடையநல்லூர்: கடையநல்லூர் அருகே சுடுகாட்டில் ஒரு ஜாதியைச் சேர்ந்தவரின் பிணத்தை புதைக்க இன்னொரு ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்தால் பதற்றம் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர்.
நெல்லை மாவட்டம், கடையநல்லூர் நகரசபைக்குட்பட்ட புளியம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி கோமதியம்மாள் நேற்று மரணம் அடைந்தார். இதையடுத்து கடையநல்லூரை அடுத்த செண்பகநல்லூரில் மற்றொரு பிரிவினருக்கு சொந்தமான சுடுகாட்டில் அவரது பிணத்தை புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இதற்கு இன்னொரு ஜாதியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்படும் அபாயம் ஏற்பட்டது. தங்கள் இனத்தவரின் சுடுகாட்டில் கோமதியம்மாளின் உடலை அடக்கம் செய்ய எதிர்ப்பு தெரிவித்து, அந்த பிரிவைச் சேர்ந்த நாட்டாமை புஷ்பராஜ் கடையநல்லூர் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவி, சப்-இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியன் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் அப்பகுதிக்கு விரைந்து வந்து சமாதான முயற்சியில் ஈடுபட்டனர்.
பின்னர் கோமதியம்மாளின் உடலை போகநல்லூர் கிராமத்தில் உள்ள சுடுகாட்டில் புதைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications