புதுகோட்டை மீனவர் ஸ்டிரைக் தீவிரம்
புதுக்கோட்டை: இலங்கை கடற்படையினர் தொடர்ந்து தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கி சூடு நடத்தி வருவதைக் கண்டித்து புதுக்கோட்டை மாவட்ட மீனவர்கள் மேற்கொண்டுள்ள வேலைநிறுத்தம் 2வது நாளாக இன்றும் தொடர்ந்தது.
புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்னத்தைச் சேர்ந்த மீனவர் தங்கப்பாண்டியன் கடந்த 9ம் தேதி இலங்கை கடற்படையினரின் வெறித்தனமான துப்பாக்கிச் சூட்டில் பலியானார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெகதாப்பட்டனம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். 2வது நாளாக இன்றும் வேலைநிறுத்தப் போராட்டம் தொடர்ந்தது.
மீனவர்களின் உயிர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு அளிக்க வேண்டும். கடலில் பாதுகாப்பான முறையில் மீன் பிடிப்பதற்கு உத்தரவாதம் தர வேண்டும். இலங்கை கடற்படையை கடுமையாக கண்டிக்க வேண்டும் என்று மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஜெகதாப்பட்டனத்தில் ஸ்டிரைக் தீவிரமாக இருக்கிறது. இங்குள்ள 300 க்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் பிடிக்கச் செல்லாமல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications