For Daily Alerts
Just In
சபரிமலையில் பெண்கள்: அகில இந்திய ஐயப்ப பக்த மகா சபை எதிர்ப்பு
புதுச்சேரி: சபரிமலை ஐயப்பன் கோவிலில் பெண்களை அனுமதிக்க அகில இந்திய ஐயப்ப பக்த மகா சபை எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
சபையின் இணைச் செயலாளர் குமரகுரு புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசுகையில், ஆரம்ப காலத்திலிருந்தே 10 முதல் 58 வயதுக்குட்பட்ட பெண்கள் சபரிமலை கோவிலில் அனுமதிக்கப்பட்டதில்லை. ஐயப்பன் பிரம்மச்சாரி என்பதால் இந்த நடைமுறை இருந்து வருகிறது.
ஆண்களும் கூட பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு பின்னர்தான் கோவிலுக்குள் நுழைந்து தரிசனம் செய்து வருகிறார்கள்.
கோவிலின் பிற பகுதிகளுக்கு பெண்களை அனுமதிப்பதில் பிரச்சினை இல்லை. ஆனால் சன்னிதானம் உள்ள பகுதிக்குள் பெண்களை அனுமதிப்பது தவறானது, அதை ஏற்க முடியாது என்றார்