ரயில் கட்டணம் மீண்டும் குறைப்பு-லாபம் அதிகரிப்பு!!

அதே போல சரக்கு ரயில் கட்டணத்தில் எந்த உயர்வும் இல்லை. பெட்ரோல், டீசல் மீதான போக்குவரத்துக் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் ரயில்வேயின் லாபம் ரூ. 25,000 கோடியாக உயர்ந்துள்ளது.
ரயில்வே அமைச்சர் லாலு பிரசாத் யாதவ் இன்று ரயில்வே பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார்.
இதன்மூலம் ரயில்வே அமைச்சரான பின் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக ரயில் கட்டணத்தைக் குறைத்து பெரும் சாதனை படைத்துள்ளார் லாலு. அதே நேரத்தில் ரயில்வேயின் லாபம் பெருமளவு அதிகரித்துள்ளது.
இரண்டாம் வகுப்பு ரயில் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
விமான நிறுவனங்களுடன் போட்டி போடும் வகையில் முதல் வகுப்பு ஏசி கட்டணம் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் வகுப்பு ஏசி கட்டணம் 4 சதவீதமும் மூன்றாம் வகுப்பு - ஏசி கட்டணம் 2 சதவீதமும் குறைக்ககப்பட்டுள்ளது.
50 கிமீ தூரத்துக்கும் அதிகமாக பயணிப்போருக்கு மட்டுமே 2ம் வகுப்பு கட்டணம் குறைப்பின் பயன் கிடைக்கும்.
அதே போல பள்ளி மாணவிகளுக்கு இலவச சீசன் டிக்கெட்டும்,
முதிய பெண்களுக்கு 50 சதவீத கட்டண சலுகையும் அறிவித்தார் லாலு.
மேலும் எய்ட்ஸ் நோயாளிகளுக்கு 50 சதவீத கட்டண சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
அதே போல அசோக் சக்ரா விருது வென்ற பாதுகாப்புப் படையினருக்கு சதாப்தி, ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில்களில் இலவச டிக்கெட் வழங்கப்படவுள்ளது.
கடந்த ஆண்டில் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடி இன மக்களுக்கான வேலை வாய்ப்புகளை ரயில்வே அதிக அளவில் நிரப்பியுள்ளது. அவர்களுக்கான இடஒதுக்கீட்டையும் தாண்டி இச் சமூக மக்களுக்கு அதிக வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
ராஜிவ் காந்தி அறக்கட்டளையுடன் இணைந்து அதிகம் குலுங்காமல் செல்லும் தாய்-சேய் எக்ஸ்பிரஸ் என்ற ரயில்கள் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இதில் சஸ்பெண்ஷன்கள் உலகத் தரம் கொண்டதாக இருக்கும்.
2007-08ம் ஆண்டில் ரயில்வேயின் லாபம் ரூ.25,000 ஆக உயர்ந்துள்ளது.
சரக்கு ரயில்கள் மூலமான வருவாய் கடந்த ஆண்டைவிட ரூ. 20,000 கோடி வரை உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு புதிய திட்டங்களுக்கு ரூ. 49,250 கோடி ஒதுக்கப்படவுள்ளது.
கட்டணங்களை தொடர்ந்து குறைத்த நிலையிலும் கடந்த 4 ஆண்டுகளில் ரயில்வே மொத்தம் ரூ. 68,778 கோடி லாபம் ஈட்டிக் காட்டியுள்ளது என்றார் லாலு.
ரயில்வே பட்ஜெட்-முக்கிய அம்சங்கள்