மணி்முத்தாறில் காட்டு யானைகள் அட்டகாசம்
அம்பாசமுத்திரம்: மணிமுத்தாறு பகுதியில் வயல்வெளிகள், தோட்டங்களில் காட்டு யானைகள் புகுந்து நெல், வாழை, தென்னை பயிர்களை நாசம் செய்து வருகின்றன.
நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளான காளக்காடு, புலவன்குடியிருப்பு, பூதத்தான்குடியிப்பில் கடந்த சில தினங்களாக யானைகள் வயல்வெளிகள், தோட்டங்களில் புகுந்து சேதப்படுத்தி வருகினறன.
மணிமுத்தாறு பகுதியில் மாஞ்சோலை தேயிலை தோட்ட பகுதியில் கடந்த சில முன் இன்பராஜ் என்பவரது வீட்டை யானைகள் உடைத்துத் தள்ளின. மேலும் கோதையார் செல்லும் பஸ்களையும் வழிமறித்தன. இதனால் அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.
இந் நிலையில் மணிமுத்தாறு பிராதன கால்வாயை ஓட்டி அமைத்துள்ள கரடிகுளம் பகுதியில் யானைகள் புகுந்து அங்கு பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர், வாழை, தென்னை மரங்களை சேதப்படுத்தி வருகின்றன.
யானைகளை கிராம மக்களும், வனத்துறையினரும் சேர்ந்து தீப்பந்தங்கள் ஏந்தியும், வெடி வெடித்தும் விரட்ட முயன்றாலும் அவரை சிறிது நேரத்தில் திரும்பி வந்து வேலையைக் காட்டுவதால் இப் பகுதி விவசாயிகள் கலக்கத்தில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications