ரயிலில் பிறந்து, விழுந்து, பிழைத்த சிசு
அகமதாபாத்: கர்ப்பிணிப் பெண் ரயிலின் கழிப்பறைக்குப் போனபோது அவருக்குப் பிரசவம் ஏற்பட்டது. பிறந்த குழந்தை, ரயில் கழிப்பறை துவாரம் வழியாக கீழே விழுந்தது. ஆனால் யாரும் எதிர்பாராதவிதமாக அந்தக் குழந்தை எந்தக் காயமும் இல்லாமல் உயிர் பிழைத்து அனைவரையும் அதிசயத்தில் ஆழ்த்தியுள்ளது.
சற்றும் நம்பவே முடியாத சம்பவமாக இது இருந்தாலும் குஜராத்தில் இந்த அதிசயச் சம்பவம் நடந்துள்ளது.
ராஜஸ்தானின் சிரோஹி மாவட்டத்தைச் சேர்ந்தவர் பூரி பென் (33). இவர் 7 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார். மருத்துவப் பரிசோதனைக்காக அவர் அகமதாபாத் செல்ல, ஜோத்பூர் - அகமதாபாத் ரயிலில் பயணித்தார்.
அப்போது சிறுநீர் கழிப்பதற்காக அவர் ரயிலில் உள்ள கழிப்பறைக்குச் சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. தொடர்ந்து குழந்தையும் பிறந்தது.
ஆனால் பெரும் அதிர்ச்சியாக, அந்தக் குழந்தை கழிப்பறை துவாரம் வழியாக கீழே விழுந்து விட்டது. இதனால் பூரி பென் அதிர்ச்சியில் மயக்கமடைந்தார்.
உடனடியாக அருகில் உள்ள அம்ப்லிசயான் ரயில் நிலையத்துக்குத் தகவல் தரப்பட்டது. அங்கிருந்தவர்கள் விரைந்து வந்து ரயில் தண்டவாளத்தில் தேடிப் பார்த்தனர். அப்போது பூரிபென்னுக்குப் பிறந்த பெண் குழந்தை லேசான சிராய்ப்பைத் தவிர எந்தவித காயமும் இல்லாமல் கிடந்ததைப் பார்த்து அதிசயித்துப் போயினர்.
உடனடியாக குழந்தையை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையின் எடையைப் பரிசோதித்தபோது 1.4 கிலோவாக இருந்தது. குறைப் பிரசவம் என்பதால் தீவிர மருத்துவப் பரிசோதனைக்கு குழந்தை உட்படுத்தப்பட்டது. இதில் குழந்தை நல்ல நலத்துடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
தற்போது இந்த அதிசயக் குழந்தை அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறது.
ஓடும் ரயிலில் பிறந்து, கழிப்பறை வழியாக விழுந்தும், பெரிய காயம் இல்லாமல் பிழைத்துள்ள இந்தக் குழந்தையை கடவுளின் குழந்தை என மருத்துவமனை டாக்டர்கள் வியப்புடன் கூறுகின்றனர்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications