ஆவின் பால் விலை திடீர் உயர்வு

இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் அமைச்சர் ஆற்காடு வீராசாமி செய்தியாளர்களிடம் கூறுகையில், பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என்று பால் உற்பத்தியாளர்கள் நலச் சங்கம் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது.
இதை ஏற்று எருமைப் பாலின் கொள்முதல் விலையை ரூ. 4ம், பசும்பால் விலையை லிட்டருக்கு ரூ. 2ம் உயர்த்த அரசு முடிவு செய்தது. திங்கள்கிழமை முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும்.
புதிய விலை நிலவரப்படி கொழுப்புச் சத்து நீக்கப்பட்ட பால் லிட்டருக்கு ரூ. 15.75 (தற்போது ரூ. 13.75) ஆக இருக்கும்.
பால் விலை உயர்த்தப்பட்ட நிலையிலும் கூட அண்டை மாநிலங்களை விட தமிழகத்தில் பால் விலை குறைவாகவே உள்ளது.
டெல்லியில் லிட்டர் பால் ரூ. 20க்கு விற்கப்படுகிறது. குஜராத்திலும், ஆந்திராவிலும் இது ரூ. 18 ஆக உள்ளது.
ஆவின் பால் விலை கடைசியாக 2007ம் ஆண்டு மார்ச் 7ம் தேதி உயர்த்தப்பட்டது. அப்போது லிட்டருக்கு ரூ. 1.50 என உயர்த்தப்பட்டு என்றார் ஆற்காடு வீராசாமி.