வாசன், ஜெயந்தி மனு தாக்கல்
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்களான ஜி.கே.வாசனும், ஜெயந்தி நடராஜனும் இன்று வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர்.
ராஜ்யசபா தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள இரு இடங்களில் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசனும், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜனும் போட்டியிடுகின்றனர்.
இன்று இருவரும் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்தனர். தேர்தல் அதிகாரியான செல்வராஜிடம் இருவரும் வேட்பு மனுக்களை வழங்கினர்.
அப்போது முதல்வர் கருணாநிதி, அமைச்சர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி, பாமக தலைவர் ஜி.கே.மணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
பின்னர் வெளியில் வந்த ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த தேர்தலில் மட்டுமல்லாமல் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும், ஐயா முதல்வர் கலைஞர் தலைமையில் தமிழகத்தில் ஐக்கிய தேசிய முற்போக்குக் கூட்டணி மாபெரும் வெற்றி பெறும் என்றார் வாசன்.
முன்னதாக முதல்வரை அவரது இல்லத்தில் சந்தி்தது வாசன் வாழ்த்து பெற்றார்.