ஆசிரியைக்கு செக்ஸ் தொல்லை-ஆசிரியர் தலைமறைவு
தூத்துக்குடி: தூத்துக்குடி பள்ளியில் ஆசிரியையிடம் பாலியல் தொந்தரவு கொடுத்த சக ஆசிரியர் மீது கோர்ட் உத்தரவின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார்.
தூத்துக்குடி பொன்னகரத்தை சேர்ந்தவர் செல்வ விநாயகம். இவர் விகேபுரத்தில் உள்ள மதுரா கோட்ஸ் மில்லில் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி சந்திரா. தூத்துக்குடி சத்திரம் தெருவில் உள்ள தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வருகிறார்.
தூத்துக்குடி ராஜாமன்னார் தெருவை சேர்ந்த சுந்தர்ராஜ். இவர் சந்திரா வேலை பார்க்கும் பள்ளியில் ஆசிரியராக உள்ளார். ஆசிரியர் சுந்தர்ராஜ் சந்திராவிடம் அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்து கொடுத்து வந்துள்ளார். இதுகுறித்து சந்திரா பள்ளி நிர்வாகத்திடம் புகார் செய்தார். ஆனால் நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கடந்த ஜனவரி 30ம் தேதி சந்திராவை வழிமறித்து சுந்தர்ராஜ் மிரட்டியுள்ளார். பள்ளி நிர்வாகமும் சுந்தர்ராஜூக்கு ஆதரவாக செயல்பட்டதால் வேறு வழியின்றி சந்திரா கடந்த 5-2-08ல் தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
ஆனால் போலீசாரும் கண்டு கொள்ளவில்லை. பின்னர் எஸ்பி, டிஐஜியிடம் புகார் கொடுத்தார். அங்கும் சரிவர நடவடிக்கை எடுக்கப்படாததால், நீதிமன்றத்ைத நாடினார் சந்திரா.
மனுவை விசாரித்த நீதிபதி சசிரேகா ஆசிரியர் சுந்தர்ராஜ் மீது நடவடிக்கை எடுக்கும்படி தூத்துக்குடி அனைத்து மகளிர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.
கோர்ட் சொன்ன பிறகே உரைத்துள்ளது மகளிர் போலீஸாருக்கு. இதையடுத்து வேகம் வேகமாக சுந்தரராஜ் மீது வழக்குப் பதிவு செய்தனர் போலீஸார். ஆனால் சுந்தரராஜோ அழகாக எஸ்கேப் ஆகி விட்டார். இப்போது அவரை வலை வீசி தேடி வருகின்றனர்.
-
மூணாறு கொழுக்குமலை 400 அடி பள்ளத்தில் குதித்து இறந்த சென்னை இளைஞர்! -
சென்னையில் ஷாக்! போலீசாரின் பிடியில் சிக்கிய மனைவியின், கழுத்தை அறுத்து கணவனே கொலை செய்த கொடூரம் -
திருச்சியில் கார் ஓட்டுநரால் 14 வயது சிறுமிக்கு நேர்ந்த கொடுமை.. மது கொடுத்து பாலியல் தொல்லை! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications