26ம் தேதி அத்வானி நாகர்கோவில் வருகை
சென்னை: பாஜக தலைவர் அத்வானி வரும் 26ம் தேதி நாகர்கோவிலில் நடைபெறும் அக் கட்சியின் பொதுக் கூட்டத்தில் பேசுகிறார்.
இது குறித்து தமிழக பாஜக தலைவர் இல.கணேசன் சென்னையில் நிருபர்களிடம் கூறுகையில்,
நாடு முழுவதும் தேர்தலுக்கு பாரதீய ஜனதா கட்சி தயாராகி வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர் பிரசார கூட்டங்கள் நடந்து வருகின்றன.
எங்கள் கட்சியின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள எல்.கே.அத்வானி பிரசார பயணமாக வரும் 26ம் தேதி தமிழகம் வருகிறார்.
மாநில துணை தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் பொள்ளாச்சியில் இருந்து கன்னியாகுமரிவரை பிரசார யாத்திரை சென்று கொண்டிருக்கிறார். யாத்திரை 26ம் தேதி நாகர்கோவிலில் நிறைவடைகிறது. இதையொட்டி நாகர்கோவிலில் நடைபெறும் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் அத்வானி பேசுகிறார்.
நாடு முழுவதும் விலைவாசி கடுமையாக உயர்ந்து விட்டது. எதிர்க்க வேண்டிய கட்சிகள் எல்லாம் ஒவ்வொரு கூட்டணிகளில் ஒட்டிக்கொண்டிருப்பதால் கூட்டணி நலன் கருதி மக்கள் பிரச்சினைகளை கைவிட்டு விட்டன.
கம்யூனிஸ்டு கட்சிகள் ஆளும் கட்சிக்கு ஆதரவு தெரிவித்து அதற்கான பதவி பலன்களை கடைசி காலம் வரை அனுபவித்து விட்டன. தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் 3வது அணி என்று நாடகமாடி ஒரு சில இடங்களில் வெற்றி பெற்றால் மீண்டும் காங்கிரசுடன் கைகோர்க்க திட்டமிட்டுள்ளன. எத்தனை நாள்தான் மக்கள் இந்த நாடகத்தை ரசிப்பார்கள்.
பட்ஜெட்டுக்குப் பிறகு ஏற்பட்டுள்ள அதிக அளவு பணவீக்கத்தையும், கடுமையான விலைவாசி ஏற்றத்தையும் கட்டுப்படுத்த திறமையற்ற மத்திய அரசை கண்டிக்கிறோம்.
விவசாயிகளுக்கு பயன்படும் கிராம வங்கிகளை ஒரு புறம் மூடுகிறார்கள். இன்னொரு புறம் வகுப்புவாத அடிப்படையில் வங்கிகளை துவக்குவதை கண்டிக்கிறோம் என்றார்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications