அரவாணிகளுக்கு நல வாரியம் அமைப்பு - கருணாநிதி அறிவிப்பு
சென்னை: அரவாணிகளுக்கென தனி நல வாரியத்தை தமிழக அரசு அறிவித்துள்ளது. சமூக நலத்துறை அமைச்சர் இதன் தலைவராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கடந்த ஜனவரி 23ம் தேதி தமிழக சட்டசபையில் இடம் பெற்ற ஆளுநர் உரையில் அரவாணிகளுக்கு நல வாரியம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி தற்போது தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம் எனும் புதிய அமைப்பு தொடங்கப்படுகிறது. மாநில சமூக நலத்துறை அமைச்சர் இதன் தலைவராக இருப்பார்.
சமூக நல வாரியம் மற்றும் சத்துணவு திட்ட சிறப்பு ஆணையர் இதன் துணைத் தலைவராக இருப்பார். அலுவல் சார்ந்த உறுப்பினர்களாக நிதித்துறைச் செயலாளர், சட்டத் துறை செயலாளர், தமிழ்நாடு மகளிர் ஆணையத் தலைவி, தமிழ்நாடு மனித உரிமை மற்றும் சமூக நீதி ஆணையத்தின் காவல்துறைத் தலைவர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டுக் கழகத்தின் மேலாண்மை இயக்குநர், கல்லூரிக் கல்வி இயக்குநர், மருத்துவக் கல்வி இயக்குநர், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை இயக்குநர், சமூக நலத்துறை இயக்குநர் ஆகியோர் இருப்பார்கள்.
அலுவல் சாராத உறுப்பினர்களாக சென்னை நூரி, காஞ்சிபுரம் பிரியாபாபு, சென்னை ஹரிஹரன், சென்னை செல்வி ஆர்.ஜீவா, விழுப்புரம் சலீமா, வேலூர் கங்கா, திருச்சி மோகனா, மதுரை காதர் மொகைதீன் என்கிற கனிமொழி ஆகியோரை முதல்வர் கருணாநிதி நியமித்து ஆணையிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications