For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

தொழிலதிபர்களை மயக்கி ஆபாச படம் எடுத்து பணம் பறிப்பு-'மிஸஸ் இந்தியா' சிமி குமார் கைது!

By Staff
Google Oneindia Tamil News

Simikumar
சென்னை: தொழிலதிபர்களையும், பெரும் பணக்காரர்களையும் மயக்கி அவர்களுடன் ஆபாசமாக இருந்து, படம் பிடித்து அதைக் காட்டி பண் பறித்து வருவதாக குற்றம் சாட்டப்பட்ட மிஸஸ் இந்தியா அழகி சிமி குமார் கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். 5 கோடீஸ்வரர்களிடம் மோசடியாக திருமணம் செய்து பணம் பறித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு தமிழகத்தைப் பெரும் பரபரப்பில் ஆழ்த்தினார் நடிகை பத்மா. வீராசாமி படத்தில் நடித்துள்ள பத்மா, பணக்கார வாலிபர்களை மயக்கி அவர்களுடன் உல்லாசாமாக இருந்து, அதை வீடியோவில் படமாக்கி அதைக் காட்டி பணம் பறித்து வந்ததாக கூறப்பட்டது. அவரைப் பொறி வைத்து போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.

இந் நிலையில் பத்மா ஸ்டைலில் மோசடி செய்ததாக சிமி குமார் கைது செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில்தான் சிமி குமார் குறித்து மகளிர் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் சார்பில் போலீஸில் புகார் தரப்பட்டது.

இதையடுத்து கொள்ளை வழக்கில் சிமிகுமாரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சிமி குமார் ஆந்திராவைச் சேர்ந்தவர். செகந்திரபாத் ஆபீசர்ஸ் சாலையில் வசிக்கிறார். இவர் கடந்த 2004-ம் ஆண்டு ஐதராபாத் அழகி பட்டம் வென்றுள்ளார். பின்னர் டெல்லியில் நடந்த மிஸஸ் இந்தியா போட்டியிலும் வெற்றி பெற்றார். மாடலிங்கிலும் ஈடுபட்டு வந்தார். இந்தி படம் ஒன்றிலும் நடித்துள்ளார். ஆங்கில படம் ஒன்றிலும் நடித்துள்ளார். ஆணுறை விளம்பரம் ஒன்றில் படு கவர்ச்சியாக நடித்து கலக்கியவர் சிமி.

இந் நிலையில், இவர் மீது சென்னை மணலியில் செயல்படும் ஸ்ரீபகவதி மகளிர் நல சங்கத்தின் சார்பில் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பான புகார் மனு கொடுக்கப்பட்டது.

அந்த புகார் மனுவில், இணையதளத்தில் ஆபாச படங்களை அனுப்பி மாணவர்களிடம் பணம் பறிப்பதாகவும், சென்னையில் நட்சத்திர ஓட்டல்களில் தங்கி உல்லாச தொழில் செய்வதாகவும் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அழகி சிமி பற்றி பரபரப்பான புதிய தகவல் ஒன்று நேற்று கிடைத்தது. சென்னை அண்ணாநகர் ஏ-பிளாக்கில் வசிக்கும் பிரபல காண்டிராக்டர் சுகுமார் ஜார்ஜ் என்பவர் அண்ணாநகர் குற்றப்பிரிவு போலீசில் ஒரு புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்.

அந்த புகார் மனுவில் அழகி சிமி தன்னுடைய காண்டிராக்டர் நிறுவனத்தில் வேலை பார்த்ததாகவும், வேலை பார்க்கும்போது ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடி சென்று விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த புகார் மனு மீது வழக்குப்பதிவு செய்து அண்ணா நகர் போலீசார் விசாரித்தார்கள்.

பின்னர் சிமியை செகந்திராபாத்தில் வைத்து இந்த வழக்கு தொடர்பாக கடந்த 9ம் தேதி கைது செய்தனர். சென்னை அழைத்துவரப்பட்டு நீதிமன்ற காவலில் சென்னை புழல் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
4 நாட்கள் சிறையில் இருந்த சிமி ஜாமீனில் விடுதலை பெற்றார். தற்போது தினமும் அண்ணாநகர் போலீஸ் நிலையத்தில் ஆஜராகி ஜாமீன் நிபந்தனைப்படி கையெழுத்து போட்டு வருகிறார்.

சிமி குறித்து சுகுமார் கூறுகையில், நான் தூத்துக்குடி மாவட்டம் நாலுமாவடியை சேர்ந்தவன். எனது குடும்பம் பாரம்பரியமிக்க குடும்பமாகும். எனது அண்ணன் கோல்டன் ஜெயசிங் சென்னையில் தொழில் அதிபராக உள்ளார்.

ஸ்கை ஹோம்' நிறுவனம் எனற நிறுவனத்தை நடத்தி வருகிறேன். ஏராளமான கட்டிடங்களை கட்டி கொடுத்துள்ளேன். ஆஸ்திரேலியாவில் குடியுரிமை பெற்று அங்கு வாழ்ந்து வருகிறேன். சென்னை அண்ணாநகரிலும் எனது நிறுவனம் உள்ளது. அங்கு சொந்த வீடும் உள்ளது.

காதலித்து மணந்த எனது முதல் மனைவி என்னைவிட்டு பிரிந்து சென்றுவிட்டார். எனக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். அவர்கள் ஆஸ்திரேலியாவில் படிக்கிறார்கள்.

கடந்த 2004ம் ஆண்டு சிமி எனக்கு அறிமுகமானார். இணையதளத்தில் அவர் மாப்பிள்ளை தேடுவதாக விளம்பரம் கொடுத்திருந்தார். அதை பார்த்து அவரோடு பேசி பழகினேன். எங்கள் பழக்கம் காதலாக மாறியது. சிமி சென்னை வந்து எனது வீட்டில் தங்கியிருந்தார்.

'ஷூ' துடைப்பார், ஊட்டி விடுவார்:

எனது ஷுக்களை சுத்தம் செய்வது முதல் சமையல் செய்து சாப்பாட்டை வாயில் ஊட்டுவது வரை பணிவிடை செய்து சிமி என்னிடம் அன்பு காட்டினார். அதில் நான் முற்றிலும் மயங்கி விட்டேன், நெகிழ்ந்து விட்டேன். இதையடுத்து சிமியை கல்யாணம் செய்து கொள்ள விரும்பினேன்.

2006 ஆகஸ்டு மாதம் 4-ந் தேதி அன்று செகந்திராபாத்தில் உள்ள நட்சத்திர ஓட்டலில் எங்கள் திருமணம் நடந்தது. திருமணத்தை முறைப்படி பதிவு செய்துள்ளோம். முதல் இரவு நடந்தபோது திடீரென்று சிமி அறையை விட்டு வெளியேறினார்.

அவருடைய வீட்டில் வளர்க்கப்படும் செல்ல நாய்க்கு உடம்புக்கு சரியில்லை என்றும், அதை பார்த்துவிட்டு வருவதாகவும் கூறி சென்றார். அத்தோடு சரி, அதன்பிறகு அவர் வரவேயில்லை. எங்களுக்குள் முதல் இரவு நடக்கவில்லை. எங்கள் திருமண வாழ்க்கையும் எவ்வித சந்தோஷமும் இல்லாமல் ஒரே நாளில் முடிந்து போனது.

அடுத்த நாள் சிமி எனக்குப் போன் செய்தார். சேர்ந்து வாழ வேண்டுமானால், ரூ. 1 கோடி தர வேண்டும். இல்லாவிட்டால் சென்னையில் உள்ள ரூ. 1 கோடி மதிப்புள்ள வீட்டை எனது பெயருக்கு எழுதித் தர வேண்டும் என்றார்.

ஆனால் அதை ஏற்க நான் மறுத்து விட்டேன். இதையடுத்து ஹைதராபாத் போலீசில் ரூ.40 லட்சம் மதிப்புள்ள அவரது பொருட்களை திருடி சென்றுவிட்டதாக என்மீது புகார் கொடுத்துவிட்டார். தொடர்ந்து என்மீது கோர்ட்டிலும் வழக்குப் போட்டு தொல்லை கொடுத்தார்.

இதையடுத்து சிமி மீது எனக்கு சந்தேகம் வந்தது. தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றின் மூலம் நான் சிமியை பற்றி தகவல் சேகரித்தேன். அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.

5வது கணவர்:

சிமிக்கு நான் முதல் கணவர் இல்லை. ஐந்தாவது கணவர். எனக்கு முன்பு நான்கு பேரை கல்யாணம் செய்து மோசடி செய்து ஏமாற்றியுள்ளார்.

முதலில் லெலே சூத் என்கிற பஞ்சாபி ராணுவ கர்னல் ஒருவரை திருமணம் செய்துள்ளார். இரண்டு ஆண்டுகளில் சூத் மர்மமான முறையில் இறந்து விட்டார்.

பின்னர் கேரளாவைச் சேர்ந்த ரவி மேனன் என்ற டெல்லி ராணுவ அதிகாரியை 2வது திருமணம் செய்தார். திருமணமான 2 மாதங்களிலே அவரும் மர்மமான முறையில் இறந்து போனார்.

3வதாக அஹித் அபுஜா என்ற பணக்காரரை திருமணம் செய்து சில மாதங்களில் அவரையும் கழற்றி விட்டு விட்டார். 4வதாக சஞ்சய் மாலிக் என்ற சர்வதேச மோசடி புரோக்கரை ஏமாற்றி திருமணம் செய்தார். நான் அவருக்கு ஐந்தாவது கணவர். சஞ்சய் மாலிக் பாஸ்போர்ட் மோசடி வழக்கில் ஐதராபாத் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆபாட படங்கள்:

சிமியின் ஆபாச படங்களை இணையதளங்கள் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பி சஞ்சய் மாலிக் ஏராளமாக பணம் சம்பாதித்து வந்தார். இதை தெரிந்துகொண்ட சிமி சஞ்சய் மாலிக் மீதும் ஐதராபாத் போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

14 வயது மகள்:

சிமி மது அருந்தும் பழக்கம் உடையவர். ஆரம்பத்தில் நன்றாகப் பழகி தனது வலையில் விழ வைப்பார். பின்னர் காரியத்தை முடித்துக் கொண்டு கழன்று கொண்டு விடுவார். அவருக்கு 14 வயதில் ஒரு மகள் இருக்கிறாள்.

அவரிடம் ஏமாந்தது நான்தான் கடைசி ஆளாக இருக்க வேண்டும். இனிமேல் யாரையும் ஏமாற்றாமல் அவர் நல்ல வாழ்க்கை அமைத்துக்கொள்ள வேண்டும். ஆணையரிடம் புகார் கொடுக்கவுள்ளேன். ஹைதராபாத் போலீஸிலும் புகார் கொடுத்துள்ளேன் என்றார் சுகுமார்.

ஏமாற்றவில்லை-மறுக்கிறார் சிமி:

இதற்கிடையே, தான் யாரையும் ஏமாற்றி மோசம் செய்யவில்லை என்று மறுத்துள்ளார் சிமி.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், என் மீது சுகுமார் ஜார்ஜ் பொய்யான புகாரை கொடுத்துள்ளார். அதன்மீது போலீசார் நடவடிக்கை எடுத்தது தவறு. இதை சட்டப்படி கோர்ட்டில் சந்திப்பேன். நான் யாரையும் ஏமாற்றி திருமணம் செய்யவில்லை. விபசார தொழில் செய்வதாகவும், என் மீது அபாண்டமான குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது.

எனக்குள்ள நல்ல பெயரையும், புகழையும் கெடுக்கும் நோக்கத்தில் இதுபோன்ற அவதூறான தகவல்களையும், பொய் செய்திகளையும் பரப்புகிறார்கள்.

எனது தரப்பு நியாயத்தை தமிழக கவர்னரை சந்தித்து எடுத்து கூறியுள்ளேன். என் மீதுள்ள புகார்கள் தவறானவை என்று விளக்கம் அளித்து கவர்னரிடம் மனு ஒன்றும் கொடுத்துள்ளேன். விரைவில் நிருபர்களை சந்தித்து விரிவாக விளக்கம் அளிக்கிறேன் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X