அட கொடுமையே.. பெங்களூர் ஐடி ஊழியர்களுக்கு புது பிரச்சனை.. இனி காரை வெளியில எடுக்கவே முடியாது போலியே!

Subscribe to Oneindia Tamil

பெங்களூரில் அதிகப்படியான ஐடி நிறுவனங்கள் இருக்கும் வெளி வளைய சாலை (ORR) பகுதியில் தினசரி போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. புதிய மேம்பாலம் திறக்கப்பட்ட போதும், தொடர்ந்து டிராபிக் குறைந்தபாடு இல்லை, இப்படியிருக்கையில் பிரதமர் மோடியும் வொர்க் ப்ரம் ஹோம், எரிபொருள் சிக்கன பயன்பாடு போன்றவற்றை அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், ORR சாலை பகுதியில் உள்ள பெரிய தொழில் பூங்காக்களுக்குள் கார்களை நிறுத்துவதற்கு ஊழியர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கும் திட்டம் விவாதிக்கப்பட்டு வருகிறது. இந்த யோசனை நடைமுறைக்கு வந்தால், தினசரி சொந்த வாகனத்தில் பயணம் செய்யும் ஆயிரக்கணக்கான ஐடி ஊழியர்களின் மாதச் செலவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. இதனால் தானான வாகன பயன்பாடு குறைந்து பொது போக்குவரத்து அதிகரிக்கும் என கணிக்கிடப்படுகிறது.

Bengaluru ORR Paid Parking Tech Park Parking Charges IT Employees Commute Cost Bengaluru Traffic Crisis ORR Tech Parks Proposal bengaluru orr paid parking proposal tech parks parking charges bengaluru it employees monthly commute cost increase ecospace ecoworld paid parking orr traffic congestion solution bengaluru it workforce parking fees orrca btp parking discussion single occupancy car reduction bengaluru promote carpooling metro public transport bengaluru outer ring road traffic crisis free parking ending tech parks it employees additional financial burden bengaluru tech park operators meeting orr daily 8 to 10 lakh commuters paid parking impact on bengaluru it sector 8 10

டெக் பார்க்கில் இலவச பார்க்கிங்

பெங்களூரு போக்குவரத்து போலீஸ், நகராட்சி அமைப்புகள், தொழில் பூங்கா நிர்வாகிகள் மற்றும் வெளி வளைய சாலை நிறுவனங்கள் சங்கம் (ORRCA) ஆகியவை இணைந்து நடத்திய உயர்மட்ட கூட்டத்தில் இந்த யோசனை முன்வைக்கப்பட்டது.

தற்போது எகோஸ்பேஸ், எகோவேர்ல்ட் உள்ளிட்ட பெரிய தொழில் பூங்காக்களில் ஊழியர்கள் தங்கள் கார்களை இலவசமாக நிறுத்தி வருகின்றனர். இந்த வசதி தொடர்ந்தால், பர்சனல் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.

இலவசம் டூ போக்குவரத்து நெரிசல்

பெங்களூரு போக்குவரத்து அதிகாரிகள் கூறுகையில், இலவச வசதி இருந்தால் மக்கள் அதை அதிகம் பயன்படுத்தும் போக்கு உள்ளது என்றனர். வெளிவட்ட சாலைப் பகுதியில் தினசரி 8 முதல் 10 லட்சம் பேர் பயணம் செய்கின்றனர். இங்கு உள்ள நூற்றுக்கணக்கான தொழில் நிறுவனங்கள் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களின் அலுவலகங்கள் இந்த போக்குவரத்து நெரிசலுக்கு முக்கிய காரணமாக உள்ளன. பெரும்பாலான கார்களில் ஒரே ஒரு நபர் மட்டுமே பயணம் செய்வதால், போக்குவரத்து நெரிசல் அதிகரிப்பதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

கார்பூலிங், மெட்ரோ, பொதுப் போக்குவரத்து

கட்டணம் அடிப்படையில் ஐடி பார்க்கில் பார்க்கிங் முறை அமல்படுத்தப்பட்டால், ஊழியர்கள் கார்பூலிங், நிறுவன பேருந்துகள், மெட்ரோ ரயில் மற்றும் பொதுப் போக்குவரத்தை அதிகம் பயன்படுத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் மூலம் பர்சனல் வாகனங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த முடியும் என்பது அதிகாரிகளின் கணிப்பு. தற்போது நிறுவனங்கள் அலுவலகத்துக்கு நேரடியாக வரும் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையில், இந்தப் பகுதியில் டிராபிக் அதிகரித்து வருகின்றன.

ஐடி ஊழியர்களுக்கு புதிய சுமை

இந்த ஐடியா நடைமுறைக்கு வந்தால், தினசரி நீண்ட தூரம் பயணம் செய்யும் ஐடி ஊழியர்களுக்கு மாதச் செலவு உயரும். ஏற்கெனவே எரிபொருள் விலை உயர்வு, நீண்ட பயண நேரம் மற்றும் போக்குவரத்து நெரிசல் ஆகியவை அவர்களை பாதித்து வரும் நிலையில், கூடுதல் பார்க்கிங் கட்டணம் அவர்களின் குடும்ப பட்ஜெட் பாதிக்கும். பல ஊழியர்கள் இந்த மாற்றத்தை கூடுதல் நிதிச் சுமையாகவே பார்க்கின்றனர்.

தற்போது இந்த ஐடியா விவாதக் கட்டத்தில் உள்ளது. இறுதி முடிவு எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், பெங்களூரின் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில், தொழில் நிறுவனங்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் தனிப்பட்ட வாகனங்களை சார்ந்திருப்பதை குறைக்கும் நடவடிக்கைகளை பரிசீலிக்கத் தொடங்கியுள்ளனர் என்பது தெளிவாகிறது.

இந்த முடிவு ஊழியர்கள் மற்றும் நிறுவனங்களிடையே கலவையான வமர்சனத்தை கொடுத்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+