For Daily Alerts
Just In
தமுமுக தலைவர் ஜவாஹிருல்லாவுக்கு டாக்டர் பட்டம்
சென்னை: தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக தலைவர் ஜவஹிருல்லாவுக்கு டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது.
தமுமுக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா. வாணியம்பாடி இஸ்லாமிய கல்லூரி பேராசியராகவும் பணியாற்றுகிறார். சென்னை பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய வங்கிகள் குறித்து பி.எச்.டி ஆய்வுப்படிப்பை அவர் மேற்கொண்டிருந்தார்.
ஆய்வை முடித்த அவருக்கு டாக்டர் பட்டம் கிடைத்துள்ளது. 29ம் தேதி நடந்த வைவா தேர்வுக்குப் பின்னர் அவருக்கு டாக்டர் பட்டம் தர முடிவு செய்யப்பட்டது.