For Daily Alerts
Just In
பாம்பன் துறைமுகத்தில் புயல் எச்சரிக்கைக் கூண்டு
ராமேஸ்வரம்: வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் புயல் சின்னம் காரணமாக பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக் கடலில் ஏற்பட்ட நர்கீஸ் புயல் சின்னத்தால் தமிழகத்திற்கு எந்த ஆபத்தும் இல்லை என்று வானிலை மையம் தெளிவுபடுத்தியுள்ளது. தற்போது புயல் சின்னம் மியான்மர் அருகே நிலை கொண்டுள்ளது.
இருப்பினும் புயல் சின்னம் காரணமாக ராமேஸ்வரம், பாம்பன், கன்னியாகுமரி கடல் பகுதிகளில் தொடர்ந்து கடல் கொந்தளிப்புடன் உள்ளது.
நேற்று பாம்பன் கடல் பகுதியில் பலத்த சூறைக் காற்றும், அலைகள் கடும் சீற்றத்துடனும் காணப்பட்டது. இதையடுத்து பாம்பன் துறைமுகத்தில் 2ம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
புயல் சின்னம் முழுமையாக அகலும் வரை புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.