For Daily Alerts
Just In
பாரம் தாங்காமல் மேடை சரிந்தது - அமைச்சர் செல்வராஜ் காயம்
திருச்சி: திருச்சி அருகே நடந்த அரசு விழாவில் மேடையில் அதிகம் பேர் ஏறியதால் அது பாரம் தாங்காமல் சரிந்து விழுந்ததில், வனத்துறை அமைச்சர் செல்வராஜ் காயமடைந்தார்.
திருச்சி மாவட்டம் ராயப்பட்டியில், கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் புதிய குளம் அமைப்பதற்கான தொடக்க விழா நேற்று நடந்தது.
விழாவில் வனத்துறை அமைச்சர் செல்வராஜ் கலந்து கொண்டார். அப்போது மேடையில் அமைச்சருக்கு பொன்னாடை அணிவிக்க, மாலை போட என ஏகப்பட்ட பேர் ஏறினார். இதனால் மேடையில் பாரம் அதிகமாக, அது சரிந்தது.
இதையடுத்து அமைச்சரும், அதிகாரிகளும் பிறரும் தடுமாறி கீழே விழுந்தனர். இதில் அமைச்சர் செல்வராஜுக்கு கன்னத்தில் அடிபட்டு ரத்தம் கட்டிவிட்டது. இதையடுத்து கன்னத்தை துடைத்துக் கொண்ட அமைச்சர் அங்கிருந்து கிளம்பிச் சென்றார்.