தமிழகத்தில் தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடும் நடவடிக்கை- கருணாநிதி உறுதி

சட்டசபையில் இன்று காவல்துறை மானியக்கோரிக்கை கொள்கை விளக்கக் குறிப்புகளை முதல்வர் கருணாநிதி தாக்கல் செய்தார். அதில் கூறியிருப்பதாவது:
தமிழக காவல்துறை ஒரு சிறந்த காவல்துறை என்ற தனிப்பெருமையை பெற்றுள்ளது. காவல்துறையின் நடவடிக்கையால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு மற்றும் மத நல்லிணக்கம் நன்கு பராமரிக்கப்பட்டு வருகிறது. தொழிலாளர்கள், விவசாயிகள் பிரச்னை ஏதுமின்றி பொது அமைதி காக்கப்பட்டுள்ளது.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் தீவிரவாத செயல்கள் தலைதூக்கியுள்ள போதிலும் தமிழகத்தி்ல் காவல்துறை மேற்கொண்டுள்ள தீவிர நடவடிக்கை காரணமாக வன்முறை செயல்கள் தடுக்கப்பட்டுள்ளன.
அண்டை மாநிலங்களில் இருந்து தீவிரவாத அமைப்புகள் தமிழகத்தில் காலூன்ற முயன்றபோது உடனுக்குடன் அவை தடுத்து நிறுத்தப்பட்டன. 2007ம் ஆண்டில் மாவோயிச குழுவை சேர்ந்த 17 பேர் கைது செய்யப்பட்டனர். 4 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையில் இருந்து வரும் தீவிரவாத அமைப்பைச் சேர்ந்தவர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு இலங்கைக்கு பொருட்களைக் கடத்திய 97 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 36 பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்டுள்ளனர். 2008 மார்ச் 31ம் தேதிவரை 14 இலங்கைத் தமிழர்கள் உள்பட 38 பேர் கைது செய்யப்பட்டு, 30 தேசிய பாதுகாப்பு சட்டத்தில் சிறை வைக்கப்பட்டனர்.
அரசு எடுத்துவரும் கடும் நடவடிக்கை காரணமாக 48 இலங்கை தீவிரவாதிகள் உள்பட 139 கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். கடத்தல் நடவடிக்கைகளும் தீவிரவாத ஊடுருவலும் முற்றிலுமாகத் தடுக்கப்பட்டுள்ளன.
காவல்துறையை நவீனமயமாக்க கடந்த நிதியாண்டில் ரூ.101 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியாண்டில் ரூ.68 கோடிக்கு திட்டம் மத்திய அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
காவல்துறையின் அனைத்து செயல்பாடுகளும் திருப்திகரமாக உள்ளது. என்றாலும் பாதுகாப்புக்கும், அமைதியான சூழலுக்கும் அச்சுறுத்தலாக விளங்கக்கூடிய சவால்களை சமாளிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
காவல்துறையினர் மக்களிடம் நட்போடு பழகும் முறையே அடிப்படை கொள்கையாக உருவாக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications