For Daily Alerts
Just In
மருத்துவமனையில் சிகிச்சைபெற்ற கைதி தப்பியோட்டம்
திருச்சி: திருச்சி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கொலை கைதி தப்பியோடினார்.
திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்நதவர் ராஜேந்திரன் (35). கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட இவர் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு கடந்த 10ம் தேதி உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட ராஜேந்திரனுக்கு போலீசார் காவல் இருந்தனர். இந்நிலையில் இன்று காலை போலீசாருக்குத் தெரியாமல் ராஜேந்திரன் தப்பியோடி விட்டார். அதிர்ச்சியடைந்த போலீசார் மருத்துவமனை முழுவதும் தேடிப்பார்த்தும் அவர் சிக்கவில்லை.