180 உயிர்கள் பலி-விஷச் சாராயம் விற்ற ஏஜென்ட்-மனைவி கைது
பெங்களூர்: தமிழகத்திலும், கர்நாடகத்திலும் 180க்கும் மேற்பட்டோரின் உயிரைப் பறித்த, விஷச் சாராயத்தை விற்ற முக்கியக் குற்றவாளி செளந்தரை போலீஸார் கைது செய்துள்ளனர். உடன் அவரது மனைவியையும் பெங்களூர் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆரம்பித்து இன்று வரை இடைவிடாமல் தினசரி சராசரியாக 20 பேர் வரை மடிந்து கொண்டு வருகின்றனர் தமிழகத்திலும், கர்நாடகத்திலும். இத்தனைக்கும் காரணம் கர்நாடக மாநிலத்தில் விற்கப்பட்ட விஷத்தன்மை வாய்ந்த கள்ளச்சாராயம்.
இதுவரை 189 பேர் விஷச் சாராயத்திற்கு உயிரிழந்துள்ளனர். இன்னும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.
இந்த விஷச்சாராயத்தை விற்பனைக்கு விட்ட முக்கியக் குற்றவாளி செளந்தர் என பெங்களூர் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது. ஆனால் செளந்தர் தனது மனைவியுடன் ஞாயிற்றுக்கிழமையை தலைமறைவாகி விட்டார்.
அவரை பல்வேறு தனிப்படைகள் அமைத்து பெங்களூர் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் தீவிரமாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் செளந்தரும், அவரது மனைவியும் நாமக்கல்லில் வைத்து பெங்களூர் போலீஸாரிடம் சிக்கியுள்ளனர்.
செளந்தரை பெங்களூருக்குப் போலீஸார் அழைத்து வருகின்றனர். இவர் தனது கூட்டாளிகள் மூலம் தமிழக, கர்நாடக எல்லைக் கிராமங்களில் கள்ளச்சாராயத்தை விற்று வந்துள்ளார். இதுதவிர கர்நாடக கிராமங்கள், குடிசைப்பகுதிகளிலும் செளந்தர்தான் ஒட்டுமொத்தமாக கள்ளச்சாராயத்தை விற்று வந்துள்ளார்.
செளந்தரிடம் நடத்தப்படும் விசாரணையில் அவரது கள்ளச்சாராய சாம்ராஜ்யம் குறித்த பல திடுக்கிடும் தகவல்கள், இதன் பின்னணியில் உள்ள பெரும்புள்ளிகள் குறித்த விவரங்கள் வெளியாகும் எனத் தெரிகிறது.
இதற்கிடையே கள்ளச்சாராய விற்பனையைக் கண்காணித்துத் தடுக்கத் தவறியதற்காக கர்நாடகத்தில் 9 போலீஸார், 12 கலால்துறையினர் உள்ளிட்ட 21 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
விஷச் சாராயத்திற்கு இதுவரை இரு மாநிலங்களிலும் மொத்தம் 189 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் தமிழகத்தின் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 54 பேர் உயிரிழந்துள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து சிகிச்சையில் உள்ளனர். இவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
கர்நாடகத்தின் கோலார் மாவட்டத்தில் 33 பேர் இறந்துள்ளனர். இங்கு நிலைமை சற்று மேம்பட்டுள்ளது. புதிதாக யாரும் இறக்கவில்லை. 6 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications