விலைவாசி-கூட்டணி கட்சிகளுக்கும் பொறுப்பு-காங்
சிதம்பரம்: விலைவாசி உயர்வுக்கு காங்கிரஸ் மட்டும் பொறுப்பல்ல. கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி கூறினார்.
சிதம்பரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
கர்நாடகா முதல்வராக பொறுப்பேற்ற எதியூரப்பாவிற்கு தமிழக முதல்வர் வாழத்து கூறியுள்ளார். இருவருக்கும் இடையே சுமுகமான உறவு உள்ளது (!). இதனால் ஓகேனக்கல் திட்டம் எந்தவித சிக்கலுமின்றி நிறைவேறும் என நம்புகிறேன் (!!).
தமிழக முதல்வருக்கு 85 வயது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் பிறந்த தினத்தை முன்னி்ட்டு தமிழகத்திற்கு பல நல்ல பயனுள்ள திட்டங்களை அறிவிக்க உள்ளனர்.
அதனுடன் சேர்த்து பெட்ரோல், டீசலுக்காக மாநிலத்தில் விதிக்கப்படும் உள்ளூர் வரியை குறைத்து பிறந்த நாள் பரிசாக அறிவிக்க வேண்டும்.
தமிழக காங்கிரஸ் கட்சியில் சிலர் செயல்படாத நிலையில் உள்ளனர். செயல்படாத நிர்வாகிகள் விரைவில் மாற்றம் செய்யப்படுவர். விலை வாசி உயர்வுக்கு காங்கிரஸ் மட்டும் காரணமல்ல. கூட்டணியில் உள்ள கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்றார்.