கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர் நிர்வாண நிலையில் கொலை!
அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊழியர் ஒருவர் நிர்வாண நிலையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் ஜெயங்கொண்டம் சாலையில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல துறை அலுவலகங்கள் ஒரே கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது.
இந்த அலுவலகத்தில் இரண்டாவது மாடியில் பொதுப்பணித்துறை மின் பிரிவு அலுவலகம் உள்ளது.
இங்கு குணசேகரன் என்ற மின் ஊழியர் பணியாற்றி வந்தார். பணி முடிந்து அலுவலகத்திலேயே தங்குவது வழக்கம்.
வழக்கம் போல் நேற்று பணிக்கு வந்த மற்ற ஊழியர்கள் மின் பிரிவு அலுவலகத்தில் உள்ள கழிவறையில் குணசேகரன் நிர்வாண நிலையில் பிணமாக கிடந்ததை கண்டு திடுக்கிட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
விரைந்து வந்த போலீசார் குணசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிதோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
குணசேகரனின் தலையின் பின்பக்கத்தில் யாரோ உருட்டுக்கடையால் தாக்கி கொலை செய்துள்ளனர். அதனால் தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் உடலை கழிவறை வரை இழுத்துச் சென்று போட்டுள்ளனர்.
இது குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கண்டுபடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. விரைவில் குற்றவாளிகள் பிடிபடுவர் என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
-
விஜய்யின் திருச்சி கூட்டத்தில் ஊடகங்களுக்கு அனுமதி மறுப்பு.. எதிர்ப்பால் உடனே முடிவை மாற்றிய தவெக -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்!












Click it and Unblock the Notifications