For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வரதட்சணைக் கொடுமை: ஐஏஎஸ் அதிகாரியின் மருமகன் கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: ஐஏஎஸ் அதிகாரியின் மகள் கொடுத்த வரதட்சணை கொடுமை புகாரின் பேரில் அவரது மருமகன் கைது செய்யப்பட்டார். அவரது குடும்பத்தினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி கற்பூர சுந்தரபாண்டியன். இவரது மகள் வினோதினி ராஜேஸ்வரி (33). இவர் ஒரு டாக்டர். சென்னையைச் சேர்ந்த என்ஜீனியர் அரவிந்த் (37) என்பவரை கடந்த 16.6.97ல் திருமணம் செய்து கொண்டார். அரவிந்த் சென்னை கோபாலபுரத்தில் சொந்தமாக பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இவர்களுக்கு சமிதா (8) என்ற மகள் இருக்கிறாள்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கருத்துவேறுபாடு காரணமாக வினோதினியும், அரவிந்தும் பிரிந்து வாழ்கின்றனர். மகள் சமிதாவுடன் பெற்றோருடன் வசித்து வருகிறார் வினோதினி.

இந்நிலையில், நேற்று முன்தினம் தி.நகர் துணை கமிஷனர் முத்துசாமியிடம் தனது கணவர் அரவிந்த் மீது புகார் மனு கொடுத்தார் வினோதினி.

அதில், திருமணத்தின் போது எனது பெற்றோர் வரதட்சணையாக 200 சவரன் நகைகளும், ரூ.4 லட்சம் பணம் மற்றும் வெள்ளி சாமான்கள் உள்பட ஏராளமான சீர்வரிசைகளையும் கொடுத்தனர். ஆனால் பிளாட், சொகுசு கார் வேண்டும் என்று எனது கணவர் வீட்டினர் வற்புறுத்தி வந்தனர்.

எனது கணவருக்கு குடிப்பழக்கம் உண்டு தினமும் நள்ளிரவுக்கு மேல்தான் வீட்டிற்கு வருவார். குடிபோதையில் என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்வார். சில நேரம் இரவு நேரங்களில் நண்பர்களையும் அழைத்து வருவார். பலமுறை கண்டித்தும் அவர் திருந்தவில்லை.

காரும், வீடும் எனது பெற்றோர் வாங்கி தராததால் என்னை எனது கணவர் துன்புறுத்தி வந்தார். கொடுமைகளை எல்லாம் சகித்துகொண்டு எனது மகளுக்காக அவருடன் வாழ்ந்து வந்தேன். ஆனால் 2 பெண்களுடன் அவருக்கு தொடர்பு ஏற்பட்டது.

அவர்களில் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொள்ளவதற்காக மதம் மாறிவிட்டார். இதை தட்டிக்கேட்ட என்னை அடித்து உதைத்து விரட்டி விட்டார்.

ஒன்றரை வருடமாக நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். ஆனால் அவர் திருந்தவில்லை. மாறாக என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டி வந்தார். எனக்கும், எனது மகளின் உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எங்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். வரதட்சணையையும் திருப்பி பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இதையடுத்து, புகார் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசாருக்கு துணை கமிஷனர் முத்துசாமி உத்தரவிட்டார். இதையடுத்து நேற்று அதிகாலை அரவிந்த் கைது செய்யப்பட்டார்.

அவர் மீது வரதட்சணை கொடுமை, சித்ரவதை செய்தல், கொலை மிரட்டல் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு சட்ட பிரிவு 4 உள்பட 6 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

அரவிந்த் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரவிந்தின் தந்தை நடராஜன், தாய் தனலெட்சுமி, நண்பர் ஹரி ஆகியோர் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X