வேலூர் மாநகராட்சி இன்று உதயம்-கருணாநிதி தொடங்கி வைக்கிறார்
வேலூர்: தமிழகத்தின் 9வது மாநகராட்சியாக இன்று வேலூர் மாநகராட்சி உதயமாகிறது. முதல்வர் கருணாநிதி இன்று வேலூர் மாநகராட்சியை தொடங்கி வைக்கிறார்.
தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய மாநகராட்சிகள் உள்ளன. சமீபத்தில் ஈரோடும், திருப்பூரும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டன.
அடுத்து வேலூரும், தூத்துக்குடியும் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதில் வேலூர் மாநகராட்சி இன்று முறைப்படி தொடங்கி வைக்கப்படுகிறது.
வேலூர் கோட்டை மைதானத்தில் இன்று மாலை 5 மணிக்கு விழா நடைபெறுகிறது. வேலூர் மாநகராட்சியைத் தொடங்கிவைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் வழங்குகிறார்.
வேலூர் மாநகராட்சியில், வேலூர், ஆற்காடு, வாலாஜா, ராணிப்பேட்டை ஆகிய நான்கு நகராட்சிகளும், சத்துவாச்சாரி, தாராபடவேடு, மேல்விஷாரம் ஆகிய 3ம் நிலை நகராட்சிகளும், 8 பேரூராட்சிகள், 61 கிராம ஊராட்சிகள் இணைக்கப்படுகின்றன. மாநகராட்சியின் மொத்த மக்கள் தொகை 9 லட்சத்து 7 ஆயிரமாக இருக்கும்.
மாநகராட்சி தொடக்க விழாவையொட்டி வேலூர் நகரம் விழாக் கோலம் பூண்டுள்ளது. வேலூர் முழுவதும் கட் அவுட்கள், தட்டிகள், பேனர்கள் என ஜெகஜோதியாக உள்ளது. மின் விளக்கு அலங்காரங்களும் கண்களைப் பறிக்கின்றன. பலத்த பாதுகாப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications