அமைச்சரின் பிடியில் இல்லை: 'கடத்தப்பட்ட' சிவபாலன்

ஈரோட்டைச் சேர்ந்த பழனிச்சாமி - மலர் விழி தம்பதியினர் சமீபத்தில் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆஜராகி, தங்களை சொத்தைக் கேட்டு கைத்தறித் துறை அமைச்சர் என்.கே.கே.பி ராஜா மிரட்டுவதாகவும், தங்களையும், தங்களது மகன் சிவபாலனையும் அவர் கடத்தியதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்தனர். தங்களது மகன் சிவபாலன் தொடர்ந்து அமைச்சரின் பிடியில்தான் இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதுதொடர்பாக மாநில மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் புகார் கொடுத்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பந்தப்பட்ட சிவபாலன் நேற்று இரவு திடீரென ஈரோட்டில் செய்தியாளர்களை அழைத்துப் பேசினார். 2 பேருடன் வந்த சிவபாலன் செய்தியாளர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை.
மாறாக நான் அமைச்சரின் கஸ்டடியில் இல்லை. சுதந்திரமாக இருக்கிறேன். நண்பர்களுடன் பெருந்துறை, கோவை, திருப்பூர் போன்ற ஊர்களுக்குப் போயிருந்தேன். எனது தாயார் கொடுத்துள்ள புகார் தவறானது. டிவி செய்தியைப் பார்த்து விட்டுத்தான் வந்தேன். கோர்ட்டில் வழக்கு உள்ளதால் மேற்கொண்டு பேச விரும்பவில்லை. கோர்ட்டில் பேசிக் கொள்கிறேன் என்று கூறி விட்டு விருட்டென கிளம்பி விட்டார்.
உங்களுடன் வந்திருப்பது யார், யார் உங்களுடைய நண்பர்கள் போன்ற கேள்விகளுக்கு அவர் பதில் சொல்ல மறுத்து விட்டார்.
என்கேகேபி ராஜாவுக்கு பயந்தே அவர் இவ்வாறு பேசியதாகத் தெரிகிறது.
தொடர்பான செய்திகள்:
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications