மதிமுக அவைத் தலைவராக கண்ணப்பன் தேர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை: மதிமுக அவைத் தலைவராக மு.கண்ணப்பன் தேர்வு செய்யப்பட்டார். பொருளாளர் மற்றும் துணைபொதுச் செயலாளர் பதவிகளுக்கும் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மதிமுக அவைத் தலைவராக எல்.கணேசனும், துணைப் பொதுச் செயலாளராக செஞ்சி ராமச்சந்திரனும் இருந்து வந்தனர். இருவரும் கட்சியிலிருந்து நீக்கப்பட்டு விட்டனர். இதையடுத்து புதிய அவைத்தலைவர் மற்றும் துணைப் பொதுச் செயலாளரை தேர்வு செய்ய நேற்று தேர்தல் நடந்தது.

கட்சி பொதுச் செயலாளர் வைகோ முன்னிலையில்,அவைத் தலைவர் பதவிக்கு கண்ணப்பனும், அவர் வகித்து வந்த பொருளாளர் பதவிக்கு டாக்டர் மாசிலாமணியும், துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு துரை. பாலகிருஷ்ணனும், அமைப்புச் செயலாளர் கண்ணையனிடம் மனுக்களை வழங்கினர்.

மாலை 4 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. அந்த அவகாசம் முடிந்த போது 3 பதவிகளுக்கும் மேற்கண்ட 3 பேர் மட்டுமே மனு தாக்கல் செய்திருந்தனர். இதையடுத்து 3 பேரும் போட்டியின்றித் தேர்வானார்கள்.

இதையடுத்து கண்ணன்ப்பன் உள்ளிட்டோருக்கு பிரமாண்ட மாலை அணிவித்து வைகோ மற்றும் கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்தனர்.

அவைத் தலைவர் உள்ளிட்ட 3 பேரின் தேர்வு குறித்த முறைப்படியான அறிவிப்பு வருகிற16ம் தேதி நடைபெறும் பொதுக்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்படவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+