ஜார்ஜியா மீதான ரஷ்ய தாக்குதல்- ஐ.நா. முயற்சி தோல்வி

Subscribe to Oneindia Tamil

{image-Destroyed Georgian tank250_10082008.jpg tamil.oneindia.com}திபிலிசி: ஜார்ஜியாவின் தெற்கு ஒசேஷியா பகுதியில் ரஷ்ய படைகள் நடத்திய விமானத் தாக்குதலில் 1500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். தொடர்ந்து அங்கு ரஷ்ய விமானப்படையினர் கடும் தாக்குதலை நடத்தி வருகின்றனர். போரை நிறுத்துமாறு ரஷ்யா, ஜார்ஜியாவுக்கு ஐ.நா. கோரிக்கை விடுத்துள்ளது. ஆனால் அதை ரஷ்யா நிராகரித்து விட்டது.

ஜார்ஜியா - ரஷ்யா எல்லையில் உள்ள தெற்கு ஒசேஷியா பகுதி, ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் இது ஜார்ஜியாவுக்கு சொந்தமானதாகும். இப்பகுதி திடீரென தனியாகப் பிரிவதாக அறிவித்தது. இதற்கு ஜார்ஜியாவும் ஆதரவளித்தது.

இதையடுத்து அங்கு ரஷ்ய படைகள் தாக்குதலில் இறங்கியுள்ளன. குண்டு வீச்சு விமானங்கள் மூலம் ரஷ்ய படைகள் கடும் தாக்குதலில் ஈடுபட்டுள்ளன.

இந்தத் தாக்குதலில் 1500 பேர் இறந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இந்த திடீர் போருக்கு ஐ.நா. அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளது.

ஆனால் முதலில் ஜார்ஜியாதான் ரஷ்ய படைகள் மீது தாக்குதல் நடத்தியது. எனவேதான் நாங்கள் தாக்குதலை மேற்கொண்டோம் என்று ரஷ்யா தெரிவித்துள்ளது. ரஷ்யாவின் தாக்குதலில் ஒசேஷியா மாகாணத்தில் பெரும் சேதமும், பாதிப்பும் ஏற்பட்டுள்ளது.

மேலும், ஜார்ஜியா தலைநகர் திபிசிலி மீதும் ரஷ்ய போர் விமானங்கள் குண்டு வீசித் தாக்கின. அங்குள்ள வாசியானி ராணுவ தளம் மீதும் குண்டு வீசித் தாக்கின.

இதில் இரண்டு ராணுவ தளங்கள் மற்றும் கருங்கடல் பகுதியில் உள்ள துறைமுகமும் சேதமடைந்துள்ளன. சில எண்ணைக் கப்பல்களும், கப்பல் கட்டும் துறைமுகமும் எரிந்து போய் விட்டன.

8 முதல் 11 ரஷ்ய விமானங்கள் இந்த தாக்குதலில் ஈடுபட்டன என்று ஜார்ஜியா தெரிவிக்கிறது. பொது மக்கள் வசிக்கும் பகுதியிலும் தாக்குதல் நடத்தி இருப்பதை ஜார்ஜியா கண்டித்துள்ளது. இதுவரை நடந்த தாக்குதலில் 1,500 பேர் பலியாகி உள்ளதாக கூறப்படுகிறது. இதை ரஷ்ய வெளியுறவுத் துறை அமைச்சர் செர்க்கெய் லெவ்ரோவும் ஒப்புக் கொண்டுள்ளார்.

ரஷ்யாவின் இந்த தாக்குதலை அமெரிக்கா கண்டித்துள்ளது. ஜார்ஜியாவின் இறையாண்மையை மதித்து அந்நாட்டுக்குள் அனுப்பப்பட்டுள்ள ரஷ்ய படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கூறியுள்ளது.

ஐ.நா. கண்டனம்

ஜார்ஜியா-ரஷ்யா இடையிலான சண்டையில் பலியாகும் பொது மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. நிலைமை மிகவும் மோசமாகி வருகிறது. அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை ஐ.நா. வன்மையாக கண்டித்துள்ளது. இதை கண்டித்து ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையே, இந்த மோதலை முடிவுக்கு கொண்டு வருவது தொடர்பாக விவாதிக்க கூடிய ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் எந்தவித முடிவும் எடுக்கப்படவில்ைல.

இந்த மோதலில் எப்படி ரஷ்யாவை கட்டுப்படுத்துவது என்பதில் வல்லரசு நாடுகளுக்கு குழப்பம் ஏற்பட்டதால் எந்தவிதமான முடிவும் எட்டப்படவில்லை. மேலும், இதில் ராணுவ ரீதியாக ஜார்ஜியாவுக்குஉதவ அமெரிக்கா விரும்பவில்ைல என்று கூறப்படுகிறது. அப்படி செய்தால் அது ரஷ்யா - அமெரிக்கா இடையே நேரடியான மோதலுக்கு வழி வகுத்து விடும் என அமெரிக்கா அஞ்சுகிறது.

மேலும், இந்த விவகாரத்தில் எந்த நாடும் தலையிடுவதை ரஷ்யா அனுமதிக்காது. உரிய பதிலடி தரப்படும் என ரஷ்ய பிரதமர் விலாடிமிர் புடினும் எச்சரித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+