பஞ்சபட்டியில் காவல் நிலையம்-மக்கள் கோரிக்கை
கரூர்: காவல் நிலையம் அமைத்து தரும்படி கரூர் மாவட்டத்தில் உள்ள பஞ்சப்பட்டி கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் அருகில் உள்ளது பஞ்சப்பட்டி. பஞ்சபட்டி வருவாய் வட்டத்தில் 10 கிராமங்கள் உள்ளது. 9 ஊராட்சிகள் உள்ளது. 50 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
பஞ்சப்பட்டியில் அரசு மருத்துவமனை, வங்கி, தபால் நிலையம், வருவாய் ஆய்வாளர் அலுவலகம், கால்நடை மருத்துவமனை, அரசு பள்ளி. பெட்ரோல் பங்க், மின்வாரிய அலுவலகம் உள்ளது. ஆனால் மக்களுக்கு தேவையான காவல் நிலையம் மட்டும் இல்லை.
இதனால் தங்கள் பகுதியில் அடிக்கடி விவசாயத்திற்கு பயன்படும் மின் மோட்டார் திருட்டு போகின்றது. சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்பட்டு வருகிறது. புகார் கொடுக்க 15 கி.மீ. தொலைவில் உள்ள லாலாபேட்டை காவல் நிலையத்திற்கு சென்று வர வேண்டியுள்ளது என்று பொது மக்கள் கூறினர்.
கடந்த 40 வருடங்களுக்கு முன்பு பஞ்சப்பட்டியல் காவல் நிலையம் இருந்துள்ளது. ஆனால் அன்று நடந்த அரசியல் மற்றும் அதிகார குழப்பம் காரணமாக அங்கு இயங்கி வந்த காவல் நிலையம் மாயனூருக்கு மாற்றப்பட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது.
பஞ்சபட்டிக்கு காவல் நிலையம் அமைத்துத் தர வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.












Click it and Unblock the Notifications