பிந்த்ராவுக்கு தமிழக அரசு ரூ. 5 லட்சம் பரிசு
சென்னை: துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம் பெற்றுத் தந்த அபினவ் பிந்த்ராவுக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 5 லட்சம் பரிசளிக்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதல்வர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சீனத் தலைநகர் பெய்ஜிங் நகரில் நடந்து வரும் ஒலிம்பிக் போட்டியில், ஆண்களுக்கான துப்பாக்கிச் சுடும் பிரிவில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா தங்கப்பதக்கம் வென்று ஒரு மிகப் பெரிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.
இதுவரை நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிளில் தனிநபர் பிரிவில் இந்தியா தங்கப் பதக்கம் வென்றதில்லை. அது மட்டுமல்லாமல் கடந்த 28 ஆண்டுகளில் நடந்துள்ள ஒலிம்பிக் போட்டிகளில் எந்த ஒரு பிரிவிலும் இந்தியா தங்கப் பதக்கம் பெற்றதில்லை.
இந்தக் குறைகளை நீக்கி தனி நபர் பிரிவில் முதன் முறையாக அபினவ் பிந்த்ரா தங்கப் பதக்கம் பெற்று புதிய வரலாற்றப் படைத்துள்ளார்.
இவர் உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் பிறந்தவர். தற்போது சண்டிகர் நகரில் வசித்து வருகிறார். துப்பாக்கிச் சுடும் போட்டியில், தங்கப் பதக்கம் வென்றுள்ளதன் வாயிலாக இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்து வரலாறு படைத்துள்ள பிந்த்ராவுக்கு பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவருக்கு தமிழக அரசின் சார்பில் ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.
-
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
பாலைவனத்தில் பதுங்கும் சீன டிராகன்... பதறும் அமெரிக்கா.. வெறும் 90 நொடிகளில் எல்லாமே முடிஞ்சுடும் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications